காத்தான்குடி: தங்களைத் தாங்களே சுன்னத் வல் ஜமாஅத் எனக் கூறிக் கொள்ளும் அத்வைதிகள் ஒவ்வொரு வாரமும் தலைமையகத்தில் மௌலவி அப்துர் றஊப் நிரூபிப்பாரா? என்ற தலைப்பில் நாம் வழங்கி வரும் மறுப்புகளுக்கு பதில் கூறாமல் வாயடைத்துப் போனமை அனைவரும் அறிந்த விடயமே!
சுமார் 25 DVD களில் இவர்கள் யார்? இவர்களது கொள்கை, கோட்பாடுகள் என்ன? இவர்கள் எப்படி மக்களை வழிகெடுக்கிறார்கள்? என்பன போன்ற அம்சங்கள் விலாவாரியாக மக்களுக்கு விளக்கப்பட்டு வரும் இந்நிலையில் தங்களுடன் இருக்கும் சொற்ப மக்களையாவது தக்க வைத்துக் கொள்ள இவர்கள் இம்மாதம் 18,19, 20 ஆகிய திகதிகளில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்த முடிவு செய்துள்ளார்கள்.
இவர்களது விஷேடமான இக்கூட்டத்தில் பிரதான பேச்சாளராக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவரும் கலந்து கொள்கிறார். இவர் வழிகேடான கொள்கையை போதிக்கும் ஒருவராவார். இவருக்கு 14.10.2014 அன்று எமது ஜமாஅத்தினால் ஒரு விவாத அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
Leave a comment