றியாத் அமெரிக்க உத்தியோகத்தர் மீதான தாக்குதல்: கொலையாளியின் விபரம்

saudi– MJ

றியாத்: கடந்த செவ்வாய்க்கிழமை றியாத்தில் இடம்பெற்ற இரு அமெரிக்க  பிரஜைகள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நபரை றியாத் பொலிஸார்  ஸ்தலத்தில் கைது செய்தனர். அப்துல் அஸீஸ் அல் ரஷீட் எனும் 24 வயதுடைய சவுதிப் பிரஜையான இவர், அமெரிக்காவில் பிறந்தவர் எனவும், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் எனவும் சவுதி உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

வினெல் அரேபியா பாதுகாப்பு அலுவலகத்தில் அப்துல் அஸீஸ் ஏற்கனவே வேலை செய்தவர். போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில், குறித்த நிறுவனம், இவரை வெளியேற்றியிருந்தது.

மேலும், வாகன ஓட்டுதல் விதிமுறைகளை மீறியமைக்காக அமெரிக்க பொலிஸார் குற்றப் பத்திரத்தை அப்துல் அஸீஸ் மீது சுமத்தியிருந்தனர். இவர் ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர் எனவும் சவுதி உள்துறை அமைச்சு முதல்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளது.

saudi
அப்துல் அஸீஸ் அல் ரஷீட்

Published by

Leave a comment