டுபாய்: மொரக்கோ ஊடாக பயணித்து, டுபாய் விமான நிலையம் வந்து சேர்ந்த ஆபிரிக்க நாடான லைப்ரீயா பயணி ஒருவருக்கு எபோலா இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதார சோதணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்த போதிலும், உடல் வெப்ப நிலை சராசரியாகவே இருந்தது.
எனினும், டுபாய் விமான நிலைய சுகாதாரப் பிரிவினர் குறித்த பயணியை மேலும் சோதிப்பதில் ஈடுபட்டு வருவதாக டுபாய் விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆரம்பித்தில் இவ்வாறு வயிற்றுப்போக்குடன் ஆரம்பித்து அதிக வெப்பத்துடன் காய்ச்சல் ஏற்படும் போது, உடலில் எபோலா கிருமிகள் செயற்பட ஆரம்பிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் உலகை எபோலாவிலிருந்து எச்சரித்துவரும் இந்நிலையில், எபோலா, விமான நிலையங்கள் ஊடாக இலகுவாகத் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Published by

Leave a comment