துபாய்: துபாயில் வருடாந்தம், இடம் பெற்று வரும் GITEX தொழில் நுட்ப வர்த்தக கண்காட்சியில் இலங்கையை சேர்ந்த 6 கம்பனிகள் இவ்வருடம் பங்கேற்றன . இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையும், துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவரலாயமும் இணைந்து இதற்க்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்து இருந்தன .
இலங்கை தகவல் தொடர்பாடல் உற்பத்தித் திறனை ICT வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தும் நோக்கமாகவே இலங்கை கம்பனிகள் இவ்வருட GITEX கண்காட்ச்சியில் பங்கேற்றன . துபாயில் உள்ள உலக வர்த்தக அரங்கில் கடந்த 12ம் திகதி தொடங்கிய இந்நிகழ்வினை துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதிதூதுவர் எம் எம் அப்துல் றஹீம் இலங்கைக் கம்பனிகளின் கண்காட்சி கூடத்தினை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இலங்கை வர்த்தக குழுவினரை வரவேற்றும் இராப்போசன வைபவமும் இலங்கை பிரதி தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இந்நிகழ்வில் துபாயில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் மற்றும் இலங்கை வியாபாரச் சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Published by



Leave a comment