-டீன்பைரூஸ்-
காத்தான்குடி:எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயிலில் மிக பிரமாண்டமான எற்பாடுகளுடன் இடம் பெற இருக்கும் “ சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு மற்றும் பொதுக் கூட்டத்திற்கான ” சகல ஏற்பாடுகளும் அல்லாஹ்வின் உதவியுடன் விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம்.இப்றாஹீம் (நத்வி) JP தலைமையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் நாயகம் மௌலவி எம்.எல்.ஏ.எம்.காஸீ்ம் (பலாஹி) JP தெரிவித்தார்.
மௌலவி எம்.எல்.ஏ.எம்.காஸீ்ம் (பலாஹி) மேலும் தெரிவிக்கையில், “இம்மாநாடு எங்கள் ஷெய்குனா ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி அவர்களின் கொள்கையினை சொல்லும் மாநாடு அல்ல. மாறாக சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளை ஒன்றினைத்து உறவுகளை உண்டுபன்னி அவர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தலுமாகும்” எனத் தெரிவித்தார்.
“மாநாடு தொடர்பான சகல விடயங்களையும் ஊடகவியாளர்கள் சந்திப்பின் போது விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம்.இப்றாஹீம் (நத்வி) ,சட்டத்தரணி MIAH.நவாஸ் (At-at-law), அல்ஹாஜ் அப்துப் ஜவாத் ஆலிம் வலியுழ்ழாஹ் நிதியத்தின் செயளாலர் மௌலவி KLM.ஸஹ்லான் (றப்பானி )BBA/JP, ஆகியோரால் மிகத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டிருந்தும் இன்று சிலர் தங்களது காழ்ப்புணச்ர்சியின் காரணமாக சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளையும் பொது மக்களையும் திசை திருப்பும் முயற்சியின் இறங்கியுள்ளனர். இவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதினைத் தவிர வேறு வழியில்லை” என்றும் தெரிவித்தார்.
மாநாட்டின் நோக்கங்கள் தொடர்பாக ……..
Published by







Leave a comment