சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்றாகும்

IMG_0808– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும், ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் தலைமையில் இக்கூட்டம் வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில் வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் அங்கத்தவர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் பொதுச்சேவையில் ஆர்வமுள்ளவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment