-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடை பெறவுள்ள சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டிக்கு பிரதம பேச்சாளராக வருகை தரவுள்ள ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் தலைவா்,செயலாளர் ஒப்பமிட்டு “ விவாதிக்க முன்வருவாரா ” எனும் தலைப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
காத்தான்குடிக்கு வருகை தர இருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு தேசிய தௌஹீத் ஜமாஅத் ( NTJ ) இன் விவாத அழைப்பு கடிதம் தொடர்பான விடயம் அறிந்திருந்தும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியோ அல்லது அவர் சார்ந்தவர்களோ இது வரை எந்த ஒரு ஊடக அறிக்கையினையாவது வெளியிடாது மௌனம் காத்து வருகின்றனர்.
நபியே கூறுவீராக! சத்தியம் வந்து விட்டால் அசத்தியம் அழிந்து விடும் என்ற இறை வசனத்திற்கேற்ப சத்தியத்தின் பக்கமிருந்தால் சத்தியம் வெல்வதற்காக காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் விவாத அழைப்பினை ஏற்க முன்வருவாரா உலகம் போற்றும் தலைசிறந்த பேச்சாளர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி………
Published by



Leave a comment