கல்முனை: உலக உளநல தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உடல் நலப்பிரிவின் ஏற்பாட்டில் உலக உளநல தின நிகழ்வுகள் பணிமனையின் கூட்ட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், உளநல வைத்திய நிபுணர் ஏ.ஜீ.எம்.ஜூரைச், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உளநலப்பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் யூ.எல்.சறாப்தீன் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், உளநல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உளப்பிளவு நோயினை ஏற்படுத்தும் காரணிகள், நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சை, பராமரிப்பு, தடுப்பதற்கான வழிமுறைகள், நோயிலிருந்து நிவாரணம் வழங்கல் பற்றி விரிவான விரிவுரையினை உளநல வைத்திய நிபுணர் ஏ.ஜீ.எம்.ஜூரைச் மற்றும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உளநலப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் யூ.எல்.சறாப்தீன் ஆகியோர் நிகழ்த்தினார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகுட்பட்ட பிரதேசத்தில் உளப்பிளவு நோயினால் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் எம். அர்ஷாத் காரியப்பர் இதன்போது தெரிவித்தார்.
Published by




Leave a comment