‘துறைசார் நிபுணத்துவமிக்க உலமாக்களும், தகவல் தொடர்பாடலின் பங்கும்’ கருத்தரங்கு

almanar– அல் மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: அல் மனார் நிறுவனம் ஆற்றிவரும் கல்விச்சேவையில் மற்றுமோர் அங்கமாக ‘துறைசார் நிபுணத்துவமிக்க உலமாக்களும், தகவல் தொடர்பாடலின் பங்கும்’ எனும் தொணிப்பொருளுடனான கருத்தரங்குகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான அரபுக்கலாபீடங்களில் நடாத்த திட்டமிட்டுள்ளது.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களிலுள்ள 10 அறபு மதரசாக்கள் இச்செயலமர்வுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகம் மார்க்க ரீதியாக எதிர் நோக்கும் வாதப்பிரதிவாதங்களுக்கு முகங்கொள்ளத்தக்கதாக உலமாக்கள் தமது அறிவுகளை தகவல் தொழில் நுட்பத்துடன் கூடியதாக வளர்த்துக்கொள்வதற்கும், உலமாக்கள் துறைசார் நிபுணத்துவமிக்கவர்களாக உருவாக்கப்படுவதற்குரிய பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் முகமான ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என இக்கருத்தரங்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி அவர்களது ஆலோசனையின் பேரில் இச்செயற்றிட்டம் எதிர்வரும் வாரம் வாழைச்சேனை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அறியவருகிறது.

இச்செயற்றிட்டம் மூலம் தெரிவு செய்யப்படும் மதரசாக்களில் இரண்டு மாதங்களுக்கு வாரத்துக்கு இரு நாட்களினடிப்படையில் நான்கு மணித்தியாலங்கள் அல் மனார் சிட்டி கெம்பஸ் வளவாளர்களைக்கொண்டு விசேட பயிற்சிகள் உரிய மதரசாக்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment