-டீன் பைரூஸ்
காத்தான்குடி; மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி), தனது ”வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை விட்டு நீங்குவது தொடர்பில் முரண்பாடுகளுக்குள் சரிஆவின் அடிப்படையில் 2007 ம் ஆண்டு உடண்பாடு காணப்பட்டது எனவும், அவர் அவ்வுடண்படிக்கையினை மீறும் வகையில் (மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி), மேற்படி கொள்கை சம்மந்தமாக அண்மைக்காலமாக உரை ஆற்றி வருகின்றார் என காத்தான்குடி ஜம்இய்யத்துல் அறிவித்துள்ளது.
இது இவ்வாறிக்க தான் என்ன நிலைப்பாட்டினில் இப்போது இருக்கின்றேன் என்ற விடயம் தொடர்பாக மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி) அவர்களினால் சென்ற 21.04.2014 ல் ஆலிம்களுக்கும்,அரபு மதரசாக்களுக்கும் அரபியில் எழுதப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில்…….
மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி) அவர்கள்…
1) தான் பின்பற்றும் மத்கபு.. இமாம் ஷாபி (றஹ்மதுல்லா)
2) தரீக்காக…. அப்துல்காதர் ஜீலானி ( றஹ்மதுல்லா)
3) அகீதா… இமாம் அபுல்ஹஸன் (அல் அஷ்ஹரி )
4) இல்முல் தசவ்ப்…. என்னும் சூபித்துவ கொள்கை பற்றி தான் அறிந்திருக்கின்றேன், அதனை மக்களுக்கு போதிக்கின்றேன். என்பதுடன் இன்னும் பல விடயங்களை அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Published by




Leave a comment