மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு கனனி கையளிப்பு

mahhathus– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிக் கீழ் மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு, கனனித் தொகுதி கையளிக்கும் நிகழ்வு கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) தலைமையில் அன்மையில் நடைபெற்றது.

இதன் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் குறித்த கனனித் தொகுதியை மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந் நிகழ்வில் கல்லூரியின் அதிபர். அஷ்ஷெய்க். எம்.ஏ.சீ. ஜெயினுலாப்தீன் (மதனி) அவர்களும் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

mahhathus

Published by

Leave a comment