புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலையின் 14 வது வருடாந்த விளையாட்டு விழாவும் 18வது ஆண்டு நிறைவும்

abrar– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலையின் 14 வது வருடாந்த விளையாட்டு விழாவும் 18வது ஆண்டு நிறைவும் 12-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை அப்றார் பாலர் பாடசாலை சதுக்கத்தில் இடம்பெற்றது.

அப்றார் பாலர் பாடசாலையின் தலைவர் யூ.எல்.அசனார் தலைமையில் இடம்பெற்ற இவ் பாலர் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

abrar

இங்கு அப்றார் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் ஓட்டப் போட்டி ,பின்னோக்கி ஓடல்,தாரா நடை,குதிரை நடை,சொல் தெரிதல்,பலூன் ஊதி உடைத்தல்,நீர் நிரப்புதல் ,படம் ஒட்டுதல்,வினோத உடை, குடை விரித்து ஓடல் போன்ற பல்வேறு பாலர் விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

hizbullah lucky

இவ் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண சபை ஒறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்,காத்தான்குடி அன்வர் பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.எம்.நியாஸ்,அல் உமர் பாலர் பாடசாலை தலைவர் ஏ.எல்.அம்ஜத், அப்றார் பாலர் பாடசாலை நிருவாகிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

hizbullah team

Published by

Leave a comment