அடம்பன் பாடசாலையில் 51 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்தல்

manthai (1)– மன்னார் அடம்பனிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார்: மன்னார் மாவட்டத்திற்கு எமது அரசு அபிவிருத்திகளை செய்யவில்லை என்று கூறுபவர்கள்,இன்று அவர்கள் அனுபவகிக்கும் அச்சமற்ற சூழ் நிலையினை உருவாக்கிக் கொடுத்தவர் யார் என கேள்வி எழுப்பிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,இந்த சமாதானத்தினை பாதுகாத்து அவற்றை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அடம்பன் பாடசாலையில் 51 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு நவோதய பாடசாலை கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

manthai (1)

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணிகளான ஹூனைஸ் பாருக்,முத்தலிபாவா பாருக்,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் காசிம் குரைஷி,வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,எம்.ஜனுபர்,வீ.ஜயதிலக,வடமாகாண பிரதம செயலாளர்.விஜயலட்சுமி,மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர்.திருமதி.ஸ்டேன்லி டி மெல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

manthai (9)

அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இங்கு உரையாற்றும் போது-

ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்புக்களை சுமந்தவர்கள்,தமது பிள்ளைகள் சிற்நதவர்காளக,நாட்டுக்கும்,சமூகத்துக்கும் பலம் கொண்டவர்களாக அமைய வேண்டும்.அத்தோடு சிறந்த பதவிகளில் அவர்கள் அமர வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பதை அறியமுடிகின்றது.

இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் இந்த பாடசாலை எவ்வாறு இருந்தது.மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள்,மற்றும் மாணவர்களனி ஆடைகள்,என்பன எவ்வாறு இருந்த்து என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்,

manthai (11)

பயங்கரவாதம் இப்பிரதேசத்தில் இருந்து அகற்றப்பட்டு சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் மட்டும் எமது அரசும்,ஜனாதிபதியும் நின்றுவிடவில்லை தேவையான அபிவிருத்திகளை கொண்டுவந்துள்ளோம்.

இதன் மூலம் உள்நாட்டிலும்,சர்வதேசத்திலும்,போட்டிபோடும் அளவுக்கு மாணவர்களின் ஏனைய துறைகள் வளர்ச்சிகண்டுள்ளது.
இந்த பாடசாலையானது தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது என்ற செய்தியினை பாடசாலை அதிபர் இங்கு கூறினார்.இதனைக் கேட்டதும்,நான் மகிழச்சியடைகின்றேன்.இவ்வாறானவர்களை உருவாக்குவது எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

குறுகிய சிந்தணை இனவாத பார்வைகள் என்பன எம்மில் இருந்து அகல வேண்டும்.சிலர் மீண்டும் இருண்ட யுத்துக்கு மக்களை அழைக்கின்றார்கள்,இவர்களின் சதிகளில் மாணவர்கள்,பெற்றோர்கள் விழுந்து விட வேண்டாம் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Published by

Leave a comment