வைத்தியர்கள் கவனிப்பார்களா? வாசகர் ஆக்கம்

knocking door– அசனார் முகம்மட் சமீர்

காத்தான்குடி: அல்லாஹ்வின் உதவியால் காத்தான்குடியில் சிறந்த வைத்தியர்கள் இருக்கின்றார்கள். சிறந்த சேவைகளையும் செய்து வருகின்றனர். அரசாங்க வைத்தியசாலை காத்தான்குடியில் இருந்தபோதிலும், ‘அவசர ஆபத்து’க்கு என்று அருகில் இருக்கும் வைத்தியர்களிடம் ‘நேரம் ஒகுத்து’ பார்க்காது செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

பல் வலியால் மிகவும் அவதிப்பட்ட ஓர் சகோதரி, ஊரில் உள்ள ஓர் பல் வைத்தியரிடம் இறுதி நேரத்தில் சென்ற போது, “இப்பதானா உங்களுக்கு நேரம் கிடைக்குது? நாங்களும் பிள்ள குட்டிக்காரங்கதானே? நேரத்தோட வரத்தெரியாதா” என கதவை தாழிட்டுச் சென்று விட்ட சம்வம் காத்தான்குடியில் அண்மையில் இடம்பெற்றது. இச்சகோதரி சென்ற நேரம் கிசிக்கை நிலையம் மூடப்பட்டிருக்கவில்லை. இதைவிடவும், இதுபோன்ற பல சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.

பல் வலி தாங்க முடியாத அச்சகோதரி, “தயவு செய்து எனக்கு சிகிச்சையளியுங்கள்” என கதவுக்கு வெளியிலிருந்து குரல் கொடுத்தும் காது சாய்க்காமல் உள்ளே இருந்தார் வைத்தியர்.

எனினும் அவரது அன்புக் குழந்தைகள் கதவைத் திறக்க முற்பட்டதும், “விடுங்க, தட்டி, தட்டி பார்த்துவிட்டு, அவங்களே போய்விடுவாங்க” என கடுகடுத்துக் கொண்ட அந்த வைத்தியர், வெளியே ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்களையும் அணைத்துவிட்டு வீட்டுக்குள் இருந்துகொண்டார்.

knocking door

தாங்கள் படிக்கும்போது, இந்தச் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஓரே நன் நோக்கத்தில் இருந்தவர்கள், டாக்டர் பட்டம் பெற்றபின்னர், சமூகத்தை மறந்து, குடும்ப வாழ்க்கைக்குச் சென்றுவிட்டபின், காசு கொடுத்து சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகளிடம் தங்களை விட்டால் வேறு யாருமில்லை என்ற இறுமாப்பில், நோயாளிகள் மீது எரிந்து விழுவது ஊரில் நடந்துவரும் நாகரீகமற்ற செயற்பாடுகளாக இருக்கின்றன.

எல்லோரும் தினமும் இவ்வாறு கடைசி நேரத்தில் வந்து கதவைத் தட்டுவதில்லை. எப்போதாவது தாங்க முடியாத உடல் வலிகள் மற்றும் நோய்கள் காரணமாக உங்கள் வாசற்படியில் வரவேண்டிய தேவை நோயாளிகளுக்கு இருக்கின்றன.

குடும்பம், தனிநபர் வாழ்க்கை, மனிதர்கள் என்ற வகையில் வைத்தியர்களுக்கும் இருக்கின்றது. ஆனால் சமூகத்தின் தேவையிலிருந்து வைத்தியர்கள் வேறுபடுகின்றனர்.

பொருயியலாளரையோ, ஆசிரியர் ஒருவரையோ இவ்வாறு இறுதிநேரத்தில் வந்து ஓருவர் சந்திப்பது அரிது. ஆனால் வைத்தியர்கள் என்பவர் சமூகத்தின் தேவைக்காக தனது கதவை எந்நேரத்திலும் திறந்து வைக்கவேண்டும்.

இவை எல்லாவற்றையும் தெளிவாக அறிந்து, புரிந்து, தான், வைத்தியராக வந்தால் இந்தச் சமூகத்துக்காக தன்னையே நேரம் பாராமல் அர்ப்ணிப்பேன் என்ற நிய்யத்தில் படித்தவர்கள்தான் இன்று நோயாளிகள்மீது எரிந்து விழுகின்ற பரிதாபம் எமது ஊரில் இருக்கின்றது.

எனவே, நோய் மரணம் போன்றது. அது எந்நேரத்திலும் ஓர் மனிதனை சந்திக்கும். சுகதேவி எவரும் உங்களை வந்து இரவு நேரத்தில் சந்தித்து கைலாகு செய்யப்போவதில்லை. நீங்கள் வைத்தியர் என்பதாலும், அரசாங்கம் உங்களை வைத்தியர் என்று பட்டம் வழங்கி சமூகத்தில் அங்கீகாரம் தந்ததால்தாலுமே உங்கள் வாசற்படியில் எப்போதாவது ஒரு நோயாளி ‘நேரம் ஒகுத்து’ தெரியாமல் வந்துவிடுகின்றனர்.

எனவே, ‘மனித நேயமுடையவர்கள் வைத்தியர்கள்’ என்ற உயர்வான இந்த வார்த்தையை அசிங்கப்படுத்தாமல், இனிமேலும் மனித நேயத்தை இந்தச் சமூகத்துக்காக திறந்துவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

– அசனார் முகம்மட் சமீர்
காத்தான்குடி

Published by

Leave a comment