மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி: புதிய மாணவிகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்-2015

mahhathusஅன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

காத்தான்குடி: மேற்படி எமது மகளிர் அரபுக்கல்லூரிக்கு 2015ம் கல்வியாண்டில் ஷரீஆ மற்றும் ஹிப்ழுப் பிரிவுகளுக்கு புதிய மாணவிகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஷரீஆ பிரிவிற்கான சேர்வுத் தகைமைகள் :

1. அல்குர்ஆனை அழகாக ஓதத்தெரிந்திருத்தல்.
2. ‘ஷரீஆ’ கற்கை நெறியை தொடர்வதற்கு ஆர்வமுள்ளவராக இருத்தல்.
3. 2015ம் ஆண்டில் தரம் 07ல் கல்வி கற்பவராக இருத்தல்.
4. எழுத்துப் பரீட்சையிலும் நேர்முகப் பரீட்சையிலும் தேர்வு பெறல்.

ஹிப்ழு பிரிவிற்கான சேர்வுத் தகைமைகள் :

1. அல்குர்ஆனை அழகாக ஓதத்தெரிந்திருத்தல்.
2. அல்குர்ஆனை மனனம் செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல்.
3. 09 வயது முதல் 13 வயது வரையுள்ள மாணவிகளாக இருத்தல்.

மேற்படி பிரிவுகளுக்கு தங்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள விரும்புவோர், வெள்ளி தவிர்ந்த ஏனைய தினங்களில் மாலை 06.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை காத்தான்குடி, டெலிகொம் வீதியில் அமைந்துள்ள எமது கல்லூரியில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.11.2014ம் திகதிற்கு முன்னர் நேரடியாக ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அதிபர்,

மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக்கல்லூரி,
காத்தான்குடி.
11.10.2015

Published by

Leave a comment