பக்தாதைக் கைப்பற்றத் தயாராகும் இஸிஸ்

iraq– MJ

பக்தாத்: ஈராக்கின் தலைநகரும், புராதன இஸ்லாமிய சரித்திரங்களை உள்ளடக்கிய நகரமாகவும் திகழும் பக்தாத் நகரைக் கைப்பற்றும் பாரிய முயற்சியில் இஸ்லாமிய தேசப் போராளிகள் தற்பொழுது ஈடுபட்டுவருகின்றனர்.

2003 இல் அமெரிக்காவின் கூட்டுப்படையின் ஊடுறுவலுடன், சதாமின் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ‘சர்வதேச’ ஆட்சி இடம்பெற்று வந்தது. இன்றுவரைக்கும் ஈராக், சுதந்திரக் காற்றை நுகர முடியாமல் இரத்த பூமியாக சர்வதேசத்தால் மாற்றப்பட்டு வருகின்றது.

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்து இஸிஸ் அமைப்பாக போராடிவரும் இஸ்லாமிய தேசப் போராளிகள், தற்பொழுது பக்தாதைக் கைப்பற்றும் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்தாத்திற்கு அருகிலுள்ள ஒரு சில மாகாணங்களை இஸிஸ் அமைப்பினர் தற்பொழுது கைப்பற்றியுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பக்தாத் நகரின் பாதுகாப்பு முன்னர் எப்போதுமில்லாதவாறு, அதிகரிக்கப்பட்டுள்ளது. வெறுமனே வான்தாக்குதல்களையே மேற்கொள்ளும் எனவும் தரைப்படை இஸ்லாமியத் தேசத்துக்கு எதிராக பயன்படுத்தப்படாது எனவும் அமெரிக்கா கூறுகிறது. இதிலிருந்து அமெரிக்காவின் நாடகம் அம்பலமாகியுள்ளது என ஐரோப்பிய பத்திரிகைகள் அமெரிக்காவைக் குற்றஞ்சாட்டி வருகின்றன.

iraq
பக்தாத் சோதனைச் சாவடியில் குண்டுகள் சோதிக்கப்படும் கருவியுடன் ஈராக் பொலிஸ் உத்தியோகத்தர்

இதுவரைக்கும் எத்தனை வான்தாக்குதல்கள் இஸ்லாமிய தேசத்தில் நடாத்தப்பட்டன? அரபிக் கூட்டணிகளின் வான்தாக்குதல்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லையே? இஸிஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியை கைது செய்ய அல்லது சரணடைய அமெரிக்க ஏன் வேண்டுகோல்களை முன்வைக்கவில்லை? போன்ற பல சந்தேகங்களை குறித்த பத்திரிகைகள் முன்வைத்து வருகின்றன.

எப்படி இருந்தபோதிலும், ஈராக்கின் அரசாங்கப் படை தற்பொழுது முழு நேர அவதானிப்புடன் பக்தாதில் களமிறங்கியுள்ளன. அதிகமான இடங்களில் பாதுகாப்பு முகாம்களும், வீதித் தடைகளும், சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதை பக்தாதில் காணமுடிவதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment