புதிய காத்தான்குடி அஸ்ஸஹ்றா முன் பள்ளி நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு…..

– டீன் பைரூஸ்
20141009_084551[1]புதிய காத்தான்குடி: பிரதி வருடம் ஒக்மோபர் மாதம் 01 ஆம் திகதி கொண்டாடப்படும் சிறுவர் தின நிகழ்வு புதிய காத்தான் குடி தெற்கு அஸ்ஸஹ்றா முன் பள்ளியிலும் அண்மையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் தலைவரும், கிராம உத்தியோகத்தருமான எம்.எல்.ஏ அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கவிஞரும் எழுத்தாளருமான மதியன்பன் மஜீத், அஹமட் லெவ்வை, பைசர் அமான் உட்பட முன்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையினை அஸ்ஸஹ்றா முன் பள்ளியின் தலைவர் எம்.எல.ஏ அஸீஸ் நிகழ்தினார்.

அவர் தனதுரையில் சிறுவர் உரிமையும் சிறுவர் பாதுகாப்பும், பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்பன போன்ற விடயங்களை தெளிவு படுத்தினார்.

இந்நிகழ்வில் கவிஞர் சுபைர் பலாஹி எழுதிய சிறுவர்களுக்கான பாடலொன்றை பாடகர் ஏ.எல். கமர்தீன் பாடி சிறுவர்களை மகிழ்வித்தார்.நிகழ்வின் இறுதியில் அதிதிகளால் முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.  இந்நிகழ்வு தொடர்பான படங்களை இங்கே காணலாம்
20141009_08455120141009_08493920141009_09110220141009_091151

Published by

Leave a comment