-எம்.எச்.எம்.அன்வர்
காத்தான்குடி: கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய வலையமைப்பொன்றை ஆரம்பிப்பது என காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரையிலுள்ள ஜுமைறா விடுதியில் நடைபெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலின் போதே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஹஜ் பெருநாளை முன்னிட்டு கடந்த 7.10.2014 செவ்வாய்க்கிழமை இரவு தொடக்கம் 8.10.2014 புதன்கிழமை அதிகாலை வரை இந்த ஒன்று கூடல் நடைபெற்றது.
இந்த ஒன்று கூடலின் இறுதியில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய வலையமைப்பொன்றை ஆரம்பிப்பது எனவும், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்குள் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தி அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இத் தீர்மானங்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தக்பீர் முழங்க நிறைவேற்றப்பட்டன.
முதல் தடiவாயக கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய ஒன்று கூடல் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒன்று கூடலின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர, மட்டக்களப்பு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் (பலாஹி) இலங்கை ரூபாவாஹிணி கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான யூ.எல்.யாக்கூப், இலங்கை ரூபாவாஹிணி கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் இர்ஸாட் ஏ காதர்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யூ.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம். பரீட், முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.சியாட், எஸ்.எச்.பிர்தௌஸ், எம் ஜுனுப், முன்னால் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் உறுப்பிளர் என்.கே. றம்ழான், காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஆதம் லெப்பை (பலாஹி) உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஒன்று கூடலின் வரவேற்புரையை காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ் நிகழ்த்தினார்.
இதன் போது அதிதிகளினால் இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற காத்தான்குடி மீடியா போரத்தின் உப செயலாளர் எம்.எச்.எம்.அன்வரின் புதல்வர் அர்சக் அஹமட் மற்றும் இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸின் புதல்வர் இஷ்பாக் அஹமட் ஆகிய மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் அன்பளிப்பு நினைவுச்சின்னம், போன்றவைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இதன் இரண்டாவது அமர்வில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்டங்கலிலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஆற்றல்;களை வெளிப்படுத்தும் வகையில் பாடல் கவிதை, நாடகம், அறிவுக்களஞ்சியம், போன்ற பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதன் போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ,அம்பாறை, திருகோணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஊடக வலையமைப் பொன்றை உருவாக்குவதன் அவசியம் பற்றி ஆராயப்பட்டதுடன் கருத்துரைகளும் நடைபெற்றன.
இந்த ஒன்று கூடலின் இறுதியில்; கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய வலையமைப்பொன்றை ஆரம்பிப்பது எனவும், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்குள் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தி அனைவரையும் ஒற்றுமைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த வலையமைப்பை தற்போது அங்குரார்ப்பனம் செய்து இதன் நிர்வாக கட்டமைப்பை உடனடியாகவே ஏற்படுத்துவது பொருத்தமில்லையெனவும் பின்னர் அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு அதை செய்வதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஒன்று கூடலின் இறுதியில் நிர்வாகச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எல்.டீன் பைறூஸ் இனால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
Published by







Leave a comment