துல்ஹஜ் எட்டாம் நாளும் உழ்ஹிய்யாவும்: ஓர் வாசகரின் கேள்வி

confused[1]– எம். பஹ்மி அப்துல் கைய்யூம்

அஸ்ஸலாமு அலைக்கும்

காத்தான்குடி: இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையில் பிறை கண்டதற்கமைவாக அல்லது, முதல் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்வதன் பிரகாரம் பெருநாளை கொண்டாடி வருகிறோம்.

துல்கஃதா மாதம் 30ஆக பூர்த்தி செய்யப்பட்டதால் நாளை (06-10-2014) திங்கட்கிழமை ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்புச் செய்த அ.இ.ஜ. உலமாவின் தீர்மானத்தை இலங்கை மக்களில் அதிகமானோர் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

சர்வதேசப் பிறையை அடிப்படையாகக் கொண்டு நோன்பு, மற்றும் பெருநாள்களைக் கொண்டாடும் இஸ்லாமிய அமைப்பினர், கடந்த சனிக்கிழமை பெருநாள் கொண்டாடியதன் பிரகாரம், ஹஜ் மாதத்தின் முக்கிய அமலான உழ்ஹிய்யாவை நிறைவேற்றி வருகின்றனர்.

எனினும், உள்ளுர், இலங்கைப் பிறையை அடிப்படையாகக் கொண்டு, அ.இ.ஜ.உலமாவின் அறிவிப்புக்கமைய நோன்பையும், பெருநாட்களையும் பின்பற்றிவரும் காத்தான்குடி அல்மனார் நிறுவனம், நேற்று 04-10-2014 சனிக்கிழமை உழ்ஹிய்யாக் கொடுத்த செய்தியை தங்களுடைய ‘yourkattankudy.com’ இணையத்தளத்தில் காணக்கிடைத்தது.

உள்ளுர் பிறையை அடிப்படையாகக் கொண்டு பெருநாட்களைக் கொண்டாடிவரும் அல்மனார் நிறுவனம், உள்ளுர் பிறைப்படி துல்ஹஜ் எட்டாம் நாள் உழ்ஹிய்யாக் கொடுத்திருக்கின்றனர்.

இந்நிகழ்வானது சர்வதேச பிறைக் கொள்கையில் உள்ளவர்களுக்கே சரியானதாக அமையுமே தவிர, உள்ளுர் பிறைக் கொள்கையாளர்களுக்கு துளியளவும் சரியானதாக அமையாததுடன், இஸ்லாமிய மார்க்கத்துக்கும் முற்றிலும் முரணான செயலாக அமைகின்றது என்பதே எனது வாதம்.

அல்மனார் நிறுவனத்தில் அதிகமான ஆரம்பகால தௌஹீத் வாதிகள் இருந்தாலும், அனைவரும் உள்ளுர் பிறையின் அதாவது அஇஜ உலமாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைந்த தினத்திலேயே பெருநாளைக் கொண்டாடிவரும் நிலையில், துல்ஹஜ் பிறை 8இல் உழ்ஹிய்யா கொடுத்தமைக்கான காரணம் என்ன என்பதை அல்மனார் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

இது சம்பந்தமான மேலதிக விளக்கத்தை அ.இ.ஜ. உலமாவோ, காத்தான்குடி ஜம்மியத்துல் உலமாவோ ஒருபோதும் வழங்காது என்ற எதிர்பார்ப்பில் குழப்பத்துடன் விடைபெறுகிறேன்.

இவ்வண்ணம்,
எம். பஹ்மி அப்துல் கைய்யூம்
காத்தான்குடி

Published by

3 responses to “துல்ஹஜ் எட்டாம் நாளும் உழ்ஹிய்யாவும்: ஓர் வாசகரின் கேள்வி”

  1. KALENDER Lebbe Mubeen Avatar
    KALENDER Lebbe Mubeen

    நான் கேள்விப்பட்டேன், அவர்கள் கொடுத்த உழ்ஹிய்யா,
    யாரோ ஒரவருக்காக அவரின் அறிவுரத்தலின் படி நிரைவேரியதாக.

  2. ஊர் கேட்கவேண்டியதை நீங்க தைரியமா கேட்டிருக்கிறீங்க. நன்றி சகோ.

  3. Arabihal (Saudi Kaaranuhal) Sonna Maathiri Thaaney Al Ma… Iyankuhinrathu…..8 il Enne…7 ilum Koduppaarkal…..

Leave a reply to Irfan Cancel reply