எங்கள் தலைகள் உருண்டாலும் சுந்திரமாக பெருநாள் கொண்டாடுங்கள்: பிரித்தானியாவின் மனிதாபிமானம்!
– MJ
லண்டன்: உலகெங்கிலும் இன்று ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவிலும் இன்று பெருநாள் தொழுகைகள் பள்ளிவாயல்களிலும், திடல்களிலும் இடம்பெற்று வருகின்றன.
அலன் ஹெலின் எனும் 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான டெக்ஸி சாரதியை இஸிஸ் அமைப்பு தலையை வெட்டி கொலைசெய்தபின்னர், நேற்றிரவிலிருந்து பிரித்தானியாவில் சலசலப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தக் கொலையின் பின்னர் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்கள் லண்டன், மன்செஸ்டர், லீட்ஸ் பள்ளிவாயல்களின் இமாம்களை நேரடியாக இணைத்து, இஸ்லாம் எதைப் போதிக்கிறது, இவ்வாறான கொலையை இஸ்லாம் ஊக்குவிக்கிறனவா போன்ற விடயங்களை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தது.
இஸ்லாமிய தேசத்தில் கொல்லப்பட்ட அலன்
இதற்கு முன்னர் என்றும் இல்லாத ஓர் துவேச-பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாம் என்ற பெயரில், இஸ்லாத்துக்கு எதிரானவர்களால் செய்யப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு, பிரித்தானியா முஸ்லிம்கள் தலை குணியும் நிலை அங்கு ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையில் ஓர் சிங்களவரின் தலையை அறுத்துக் கொன்றுவிட்டு, இலங்கையில் மறு தினம் பெருநாள் கொண்டாட முடியுமா? அல்லது முஸ்லிம்கள் வெளியில் நடமாறா விட்டாலும், வீட்டிற்குள்தான் இருக்க முடியுமா?
எனினும் வழமை போன்று ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பெருநாள் தொழுகைக்காக பிரிட்டன் முஸ்லிம்கள் இன்று காலையிலிருந்து பள்ளிவாயல்களுக்கும், திடல்களுக்கும் தொழுகைக்காக சென்றுவருவதை அங்கு காணமுடிகிறது.
பிரித்தானிய பொலிஸார் தேவைப்படுமிடத்து பாதுகாப்பை வழங்க தயார் நிலையில் இருக்கின்றனர்.
இஸ்லாமிய பெயரில் ஏற்படுத்தப்படும் கொலைகளும், போராட்டங்களும், ஓர் முஸ்லிம் ஊரில் இருந்துகொண்டு, அல்லது முஸ்லிம் நாடொன்றில் இருந்துகொண்டு நோக்குவதைவிட, பல்லின மக்கள் வாழும் ஓர் ஐரோப்பா நாடொன்றில் நோக்கப்படும் விதம், வித்தியாசமானது.
“ஓர் பள்ளிவாயலை அமைத்து, ஐவேளை மற்றும் ஜூம்ஆ தொழுகைகளுக்கு அனுமதியெடுத்து, பள்ளிவாயல்களையும், இஸ்லாமிய அமைப்புக்களையும் வழிநடாத்துபவர்களுக்கே, இதனால் எழும் அசௌகரியங்கள் புரியும்” என லண்டன் பள்ளிவாயல் இமாம்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய பெருநாள் குத்பாக்களும், இஸ்லாத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் கொலை வெறிகளை எதிர்க்கும் தலைப்பிலேயே இடம்பெற்றன.
“கொல்லப்பட்ட பிரிட்டிஸ் பிரஜையான அலன், ஓர் மனிதாபிமான உதவி புரிவதற்காகவே சிரியாவுக்குச் சென்றார். ஓர் அப்பாவி, சாதாரண உழைப்பாளி, பொதுமனநலமுடையவர். எங்களது நண்பர்” என மன்செஸ்டர் ஜூம்ஆ பள்ளிவாயல் அமைப்புக்கள் தங்களது கவலையைத் தெரிவித்திருக்கின்றனர்.
“நாங்களும், அலெனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கூட்டாக இணைந்து அலனை விடுவிக்க இஸிஸ் அமைப்பிற்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் இன்று கொன்றுவிட்டனர்” என இங்கிலாந்தின் லீட்ஸ் பள்ளிவாயல் இமாம் கவலையுடன் கூறுகிறார்.
திடல்களிலும், பள்ளிவாயல்களிலும் இடம்பெறும் தொழுகைகளை மதித்து வெள்ளையர்கள் தங்கள் பாட்டிற்கு வீக்கெண்ட் மகிழ்ச்சியில் செல்கின்றனர்.
முஸ்லிம்களின் நாடுபோல் பிரித்தானியா இன்றைய தினம் காணப்பட்டாலும், இஸ்லாத்தின் பெயரால் இடம்பெறும் இவ்வாறான கொலைகளை எதிர்ப்பவர்களாகவும், கொல்லப்பட்ட அலன் ஹெலின் இற்கு அனுதாபம் தெரிவிக்கும் நேரமாகவும் அங்குள்ள முஸ்லிம்கள் இன்றைய நாளைக் கருதுகின்றனர்.
Leave a comment