திருகோணமலை: திருகோணமலை ஜமாலியா மீனவர் சங்கம், மீனவர் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து மறைந்த மீனவர்கள் ஞாபகார்த்தமாகவும், ஹஜ் பெருநாளையும் முன்னிட்டு நடாத்தும் விளையாட்டு விழா (03.10.2014) வெள்ளிக்கிழமை மீனவர் சங்கத் தலைவர் முஹம்மது பஷீர் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதீதிகளாக திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் நூர் முஹம்மட் மற்றும் பலரும் கலந்து கொண்டதுடன் முதல் நாள் நிகழ்வாக கரப்பந்தாட்டப் போட்டி இடம் பெற்றது. பதினான்கு அணிகள் கலந்துகொண்டு இறுதிப் போட்டிக்கு பீச் ஈகில் ஏ, பீச் ஈகில் பீ அணிகள் தகுதி பெற்று பீச் ஈகில் ஏ அணி வெற்றி பெற்றது.
இப்போட்டிகள் பகல் இரவு போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்னும் பல போட்டிகளான கிரிக்கெட், நீச்சல், படகுப்போட்டி, வள்ள ஓட்டம் இன்னும் பல சுவாரசியமான போட்டிகளும் இடம்பெறவுள்ளதுடன் இறுதி நாள் போட்டி 07.10.2014 செவ்வாய் கிழமை இடம் பெறவுள்ளது.
Published by



Leave a comment