7000 கி.மீ. தூரத்தை தனது வாகனத்தில் கடந்து ஹஜ்ஜூக்கு வந்துசேர்ந்த இஸ்லாத்தைத் தழுவிய பிரான்ஸ் தம்பதி!

hamza– MJ

மக்கா: பிரான்ஸ் நாட்டின் பிரஜையான அலக்ஸாண்டர், 6 வருட இஸ்லாமிய ஆய்வின் பின்னர் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை ஹம்ஸா என மாற்றிக்கொண்டார். இவர் தனது மனைவியுடன் முதன் முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காவிற்கு வந்து சேர்ந்திருக்கின்றார்.

“தான் ஆப்ரிக்க நாடுகளில் வேலை செய்யும்போது பள்ளிவாயல்களில் ஒலிக்கும் அதானைக் கேட்டிருக்கின்றேன். இந்த அதானின் பின்னர் நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தேன். இஸ்லாத்தை தேட ஆரம்பித்தேன்”.

“அல்ஹம்துலில்லாஹ். இன்று உலகிலேயே மிகச்சிறந்த இடத்திற்கு வந்து தொழுவதற்கு அல்லாஹ் எங்களுக்கு அருள்புரிந்துள்ளான். இஸ்லாம் உண்மையான மார்க்கம். சாந்தி மார்க்கம். ஒரு மனிதன் உயர்ந்து நிற்பதற்கு இன்றியமையாத மார்க்கம்” இவ்வாறு இஸ்லாத்தைத் தழுவிய பிரான்ஸ் பிரஜையான ஹம்ஸா கூறுகிறார்.

hamza
மக்காவில் தனக்கு வழங்கப்பட்ட ஹோட்டல் அறையில் மகிழ்ச்சியுடன் ஹம்ஸா (அலக்ஸாண்டர்)

“தாங்கள் உம்ரா வீஸா மூலமாக மக்காவுக்கு வரவேண்டும் என்ற ஆசையே இருந்தது. எனினும் ஹஜ் செய்வதற்கான ஆர்வமும் இருந்தது. நைஜீரியாவிற்கு வந்து அங்குள்ள சவுதி தூதரகத்தில் ஹஜ் வீசா பெறுவதற்கு பல நாட்கள் காத்திருந்தோம். எங்களது விடயத்தையும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய விடயத்தையும் அங்குள்ள சவுதி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். அதற்கு அவர்கள் மன்னரின் விருந்தாளிகளாக உலகம் முழுவதிலுமிருந்து 1000 யாத்திரிகர்கள் தெரிவு செய்யப்படும் நடைமுறை இருக்கிறது. இவற்றுள் அதிகமானவை தீர்ந்துவிட்டன. எனினும் மன்னர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு உங்களுக்கு அறிவிக்கிறோம் என அதிகாரிகள் கூறினர்”.

ஒவ்வொரு வருட ஹஜ்ஜின் போதும் உலகிலிருந்து பல பாகங்களிலும் வரும் யாத்திரிகர்களுள் 1000 பேர், மன்னர் அப்துல்லாஹ்வின் அழைப்பின் பேரில் கௌரவிக்கப்படுவர். இவர்கள் ‘மன்னரின் விருந்தாளிகள்’ என அழைக்கப்படுவர். இவர்களுக்கு ஹஜ்ஜின்போது மன்னர் சார்பாக விசேட சலுகைகளை சவுதி அரசாங்கம் அளிக்கும்.

இந்த ஆயிரம் விருந்தாளிகளுள் ஒருவராக ஹம்ஸாவும் அவரது மனைவியும் உள்ளடக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு விசேட அம்சம்.

“அல்லாஹ்வின் உதவியால் எங்களுக்கு இம்முறை ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அல்லாஹ்வுக்கும், மன்னருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்”.

“நான் புனித கஃபாவை முதன் முதலில் கண்டதும் வாய்விட்டு அழுதுவிட்டேன். கஃபாவின் முன் எழுந்து நின்று, அல்லாஹ்வே நன்றி உனக்கு. என அழுதழுது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். இந்தப்பாக்கியம் கிடைத்தது என் வாழ்நாளில் பொக்கிஸம்” என ஹம்ஸா ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறார்.

“நாங்கள் பிரான்ஸில் இருந்து 7000 கி.மீ. தூரத்தைத்தாண்டி தங்களது காரில் வந்தோம். போதுமான உணவுப் பொருட்களை எடுத்து வந்தோம். தேவைப்பட்டதை ஒவ்வொரு நாடுகளைக் கடந்து வரும்போதும் வாங்கிக்கொள்வோம்”.

இவ்வாறு தனது பயண அனுபவத்தை விபரிக்கிறார் ஹம்ஸா. அவரது ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் ஆக மாற நாமும் பிரார்த்திப்போம்!

Published by

2 responses to “7000 கி.மீ. தூரத்தை தனது வாகனத்தில் கடந்து ஹஜ்ஜூக்கு வந்துசேர்ந்த இஸ்லாத்தைத் தழுவிய பிரான்ஸ் தம்பதி!”

  1. Alhamdhulillah ! Praise be to Allah!

  2. YA ALLAH AENGALUKKUM HAJJ SEYYA KUDIYA PAKIYATHTAU THANDARUL WAYAHA

Leave a reply to FASMIL Cancel reply