முஹம்மட் சியாம் எனும் 18 வயது முஸ்லிம் இளைஞனை 13 தினங்களாக காணவில்லை

siyam– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இலக்கம் 476, ஹிழுறியா ஜூம்மா பள்ளிவாயல் வீதி , மஞ்சந்தொடுவாய்,மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட் சியாம் வயது 18 முஸ்லிம் இளைஞனை கடந்த 19-09-2014 திகதி தொடக்கம் 01-10-2014 இன்று வரை காணவில்லை என அவரின் தந்தை இப்றாஹீம் றவூப் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எனது மகன் முஹம்மட் சியாமை காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 20-09-2014 திகதி முறைபாப்பாடு செய்ததாகவும் அவரை கண்டவர்கள் 0779344130 எனும் எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவரின் தந்தை பொது மக்களை வேண்டிக்கொள்கின்றார்.

siyam
முஹம்மட் சியாம் (வயது 18)

1997-03-30 திகதி பிறந்த முஹம்மட் சியாம் காத்தான்குடி தேசியப் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவு ஐ.சி.டி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13 தினங்களாக காணாமல் போயுள்ள குறித்த முஸ்லிம் இளைஞனின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 970903330 எ என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Scan-km

Published by

Leave a comment