காத்தான்குடி: உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாடு முழுவதும் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களினால் சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றன.
இதற்கமைவாக காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் உலக சிறுவர் தின நிகழ்வு 01-10-2014 இன்று புதன்கிழமை வித்தியாலய அதிபர் ஜனாபா நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் ஜனாபா நயீமா அப்துல் ஸலாம் மற்றும் ஆசிரியை ஜனாபா முபீனா பேகம் உவைஸ் ஆகியோரினால் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் சிறுமிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலையிலுள்ள வகுப்பறைகள் பலூன்களால் சோடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment