“முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக நன்றி: பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்குவோம்”

bothuகொழும்பு: இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது.

மியன்மாரின் சர்ச்சைக்குரிய கடும்போக்கு பௌத்த அமைப்பான 969 என்ற அமைப்பின் ஸ்தாபக தலைவர் அஷின் விராத்து தேரர் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய அஷின் விராத்து தேரர், முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

அதேபோல தொடர்ந்தும் இலங்கையின் பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்கவுள்ளதாகவும் மாநாட்டில் விராத்து தேரர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்துவருவதாகவும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை உறுதிப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகவும் பொது பல சேனா அமைப்பின் தலைவர்கள் இங்கு தெரிவித்தனர்.

bothu

இங்கு பேசிய பொது பல சேனாவின் தலைவர்களில் ஒருவரான திலந்த விதானகே, இலங்கையின் பெயரை சிங்கள அரசு என்று மாற்ற வேண்டும் என்றும் இலங்கையிலுள்ள இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும், கிறிஸ்தவர்களை சிங்கள கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம்களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கையின் தேசியக் கொடியில் பல்லினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களை மாற்றி தனிச் சிங்கள அடையாளத்தை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான அரசியல் நடவடிக்கைளில் இறங்கப் போவதாகவும் தங்களின் திட்டங்களை பொது பல சேனா அமைப்பு இங்கு வெளியிட்டது.

Published by

Leave a comment