மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக பேராதெனிய கலஹா சந்தி முன்பாக ஆர்ப்பாட்டம்

peradeniya (2)– பேராதெனிய நிருபர்

கண்டி: பேராதெனிய, பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் 12.00 மணியளவில் பேராதெனிய கலஹா சந்தி முன்பாக நடைபெற்றது. மாலபே தனியார் கல்லூரியின் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சி (Hospital Training)) வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அண்மையில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐவரால் தமக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சிவழங்குமாரு (Hospital Training)) கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

peradeniya (2)

இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வழங்கப்பட இருந்த நிலையில், குறித்த மனுதாரர்கள் வழக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

மாலபே பல்கலைக்கழகத்திக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் இவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

peradeniya (3)

கடந்த வியாழக்கிழமை கொழும்பு, பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள்பொறளை சுற்றுவாரத்தில் இருந்து சுகாதார அமைச்சு வரை அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சி வழங்குவதை கண்டித்து எதிர்ப்புபேரணி ஒன்றை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

peradeniya

Published by

Leave a comment