புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளைப் பெற்று ஏறாவூர் மாணவர்கள் இருவர் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் முதலாமிடம்

reema zainab eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் கோட்ட மட்ட மாணவர்கள் இருவர் 186 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

ஏறாவூர் மிச் நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலிருந்து ஏ.சாஹீல் என்ற மாணவனும், ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலிருந்து எம்.டி.றீமா சைனப் என்ற மாணவியுமே இப்புள்ளிகளைப் பெற்றவர்களாகும்.இவர்கள் இருவரும் மாவட்ட மட்டத்தில் எட்டாம் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

மாணவன் ஏ.சாஹில், தந்தையின்றி தாயினதும், உம்மம்மாவினதும் அரவணைப்பில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வளர்க்கப்பட்டவராகும்.

zahil eravur

மாணவி எம்.டி.றீமா சைனப், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr.தாரிக், Dr. நிலூபா தாரிக் ஆகியோரின் புதல்வியாவார்.

reema zainab eravur

இம்முறை ஏறாவூர் கோட்ட மட்டத்திலிருந்து 63 மாணவர்கள் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment