ஓட்டமாவடி: நாளை புதன்கிழமை (01.10.2014) மலரவிருக்கும் ஓக்டோபர் 01 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நவீன சிறுவர் பூங்காவினை சிறுவர்களுக்கு இலவசமாக பயன்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
வெள்ளி,சனி,ஞாயிறு தினங்களில் மாத்திரம் சிறுவர்களது பாவனைக்காக திறக்கப்படும் இச் சிறுவர் பூங்காவினை நாளை புதன் கிழமை விஷேடமாக சிறுவர் தினத்தை முன்னிட்டு எவ்வித கட்டணங்களும்மின்றி பயன்படுத்த அனுமதி வழங்குமாறு இன்று செவ்வாய்கிமை 30.09.2014 நடை பெற்ற 42வது சபை அமர்வின் போது இந்தீர்மாணம் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதி தவிசாளர் கொளரவ ஏ.எம்.நௌபர் அவர்கள் முன்வைத்த பிரேரனைக்கமைவாக் சபை உறுப்பினர்களது முழுமையான வரவேற்பினை பெற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி தவிசாளர் ஏ.எம் நௌபர் சர்வதேச சிறுவர் தினம் ஒவ்வொரு வருடமும் ஓக்டோபர் 01 அனுஸ்டிக்கப்படுகின்றது. இச் சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுவதன் நோக்கம் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிராக எழும் வண்முறைகளை தடுக்கவும் ஆகும்.
வெற்றி பெற்ற தேசத்தில் சிறுவர்களின் எதிர்காலத்துக்கு வழிசமைத்து கொடுத்து சிறுவர்களுக்கு எதிராக எழும் வன்முறைகளையும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றினைய வேன்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
அனைத்து சிறுவர்களும் நாளை ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள சிறுவர் பூங்காவிற்கு வருகை தந்து உலக சிறுவர் தினத்தை கொண்டாடும்மாறு தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட்,பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் உள்ளீட்ட சபை உறுப்பினர்கள் அன்பான அழைப்பினை விடுத்துள்ளனர்.
நாளைய தினம் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகள் சிறுவர் பூங்காவில் நடாத்த ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment