“காத்தான்குடி ஜாமியத்ததுல் பலாஹ் அறபிக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்துவைக்கவுள்ளது”- தலைவர் அலியார் றியாதி

buhari aliyar– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியத்ததுல் பலாஹ் அறபிக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாகம், தகவல் தொழிநுட்பம் கனிணி போன்ற கற்கை நெறிகளை தொடரவுள்ளதாகவும் அதன் தற்போதய தலைவர் மௌலவி ஏ எல் எம் அலியார் றியாதி நேற்று இடம்பெற்ற பிரதேச ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜாமியத்துல் பலாஹ்வின் செயலாளர் எம்.எச்.எம். புஹாரி பலாஹி முன்னாள் அதிபர் எம்.ஐ சலீம் ஆசிரியர் மௌலவி அமீன் பலாஹி மௌலவி பதுறுதீன் பலாஹி மத்ரஸாக்களின் அதிபர்கள் உலமாக்களும் கலந்துகொண்டனர்

தலைவர் மேலும் தனதுரையில்,

1955 ஆம் ஆண்டு காத்தான்குடியில் உருவாக்கப்பட்ட ஜாமியத்துல் பலாஹ்வானது அன்று வீடு வீடாச்சென்று புடியரிசி தேங்காய் மற்றும் தனவந்தர்களின் நிதியைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டு 397 உலமர்க்களையும் 372 ஹாபிழ்களையும் உருவாக்கி தற்போது இலங்கைக்கே முன்மாதிரியாகத் திகழும் இக்கல்லூரி எமது புதிய நிருவாகம் கையேற்ற பிற்பாடு புதிய திட்டங்களை வகுத்து செயற்பட ஆயத்தமாக உள்ளது.

buhari aliyar

எமது இந்த உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களை உருவாக்க காரணமான சங்கைக்குரிய சைகுல் பலாஹ் அவர்களின் அயராத முயற்சியாலும் தியாகத்திற்கு மத்தியிலும் இந்த மத்ரசா மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. அதனை மேலும் வளர்ச்சியடையச் செய்து தேசிய ரீதியில் சிறப்பாகத்திகழும் ஐhமியா நளீமியா போன்ற கல்லூரிகளுக்கு ஒப்பாக இக்கல்லூரியை மாற்ற வேண்டிய தேவையினை எமது நிருவாகம் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் ஊடகவியலாளர்களை அழைத்து இதனை தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும்; இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

???????????????????????????????

இதன் முதற்கட்டமாகவும் மாணவர்களின் வசதி கருதியும் கடற்கரை வீதியில் அமைந்துள்ள எமது சொந்தக்காணியில் 300 மாணவர்கள் தங்க கூடிய 3 மாடிகளைக்கொண்ட புதிய கட்டடம் ஒன்றினைகட்டுவது அதில் 14 வகுப்பறைகள் வாசிகசாலை விடுதி வசதிகள் வாகனத்தரிப்பிடம் விளையாட்டுமைதானம் போன்ற வசதிகள் அமைக்க உத்தேசித்துள்ளோம் இதற்கு 12கோடியே 70 லட்சம் செலவு தேவைப்படுகிறது.

எமது ஊரின் கண்ணாகத்திகழும் ஜாமியத்துல் பலாஹ்வானது 7 வருட கற்கை நெறியில் 2 வருடங்கள், மொழியினைக்கற்க அதாவது ஆங்கிலம் சிங்களம் அறபு தமிழ் ஆகிய 4 மொழியினைக்கற்க தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக்கொண்டு பயிற்றுவிக்கவுள்ளோம் அதே போல் தகவல் தொழிநுட்பம் கனணி இலத்திரனியல் போன்ற துறைகளிலும் எமது மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளோம்.

முன்னாள் அதிபரும் ஜாமியாவின் உப தலைவருமான சலீம் சேர் தனதுரையில்,

எமது பிரதேச ஊடகவியலாளர்கள் மிகவும் சிறப்பாகச்செயற்படுகின்றனர். ஏனைய பிரதேசங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் செய்திகளை துல்லியமாகவும் பொறுப்புணர்வுடனும் கொண்டுவர இவர்கள் உறுதுணையாகவுள்ளனர். அவர்களின் சேவையை மிகவும் பாராட்டுகின்றேன். அதேபோல் ஐhமியத்துல் பலாஹ் அறபிக்ல்லூரியினை ஓர் எடுத்துக்காட்டான போட்டி போடக்கூடிய எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஓர் கல்லூரியாக மாற்றவேண்டிய தேவை காணப்படுகிறது.

எமது உலமாக்கள் இங்கிருந்து வெளியாகும்போது பல துறைகளிலும் பட்டதாரிகளாகவும் டிப்ளோமா முடித்தவர்களாகவும் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மிளிரவேண்டும் இதுவே எமது அவாவாகும். இந்த அடிப்படையிலேயே புதிய மத்ரஸா கட்டடத்தினைக்கட்டவுள்ளோம் இதற்கு அனைவரினது பங்களிப்பு இன்றியமையாதாகும் எனத்தெரிவித்தார்
மேற்படி கூட்டத்தின்போது ஊடகவியலாளர்களினால் கேள்விகள் கேட்கப்பட்டதுடன் அதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

Published by

One response to ““காத்தான்குடி ஜாமியத்ததுல் பலாஹ் அறபிக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்துவைக்கவுள்ளது”- தலைவர் அலியார் றியாதி”

  1. bith athkala ooka paduthama thavirnthu konda ok.

Leave a reply to Naja Ahmed. Cancel reply