அல்மனாரின் வரலாறு காணாத மாவட்ட குர்ஆன் மணனப்போட்டியும் பரிசளிப்பும்

manar– அல் மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: எமது அல் மனார் நிறுவனம் வரலாற்றில் முதற் தடவையாக மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களை உள்ளடக்கியதாக அல் குர்ஆன் மனன போட்டியொன்றினை 3 பிரிவுகளாக நடாத்தியது. சர்வதேச தரத்திற்கு ஒப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி கடந்த 17, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் காலை 7:00 மணி தொடக்கம் இரவு 09:00 மணிவரை காத்தான்குடி, அல் மனார் நிறுவன அர் ராஸித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி அவர்களின் பணிப்புரைக்கமைவாக காத்தான்குடி மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலுள்ள பிரசித்திபெற்ற உலமாக்கள், ஹாபிழ்களை உள்ளடக்கியதாக விசேட செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களது ஆலோசனைகளிலும், வழிகாட்டல்களிலும் இப்போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.

manar

முதலாம் பிரிவு 10 ஜூஸ்உக்காளகவும், 20 ஜூஸ்உக்கள் 2ஆம் பிரிவாகவும், 3ஆம் பிரிவு 30 ஜூஸ்உக்களாகவும் வரையறுக்கப்பட்டு பெண்கள் முதலாம் பிரிவுக்கு மாத்திரமென்றும் எத்தகைய வயதுக்கட்டுப்பாடுமின்றி கலந்து கொள்ள முடியுமென்ற நிபந்தணைகளுடனும், ஆணகள் முதலாம் பிரிவுக்கு 15 வயதுக்கு உட்பட்டவர்களும், 2ஆம் பிரிவுக்கு 18 வயதுக்குட்பட்டவராகவும், இவ்வயதெல்லைக்கு மேற்பட்டவர்கள் 30 ஜூஸ்உகளுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனைகளுக்கு அமைவாக இப்போட்டிக்கு 90 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

manar1

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை,ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடியிலுள்ள அனைத்து ஹிப்ழ் மத்ரசாக்கள், பள்ளிவாயல்கள், மூத்த உலமாக்கள் இதுவிடயத்தில் அறிவுறுத்தப்பட்டு மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியாகவும், அவர்களது திறமைகளை தேசத்துக்கு வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும் இப்போட்டி அமைந்தது என்றால் அது மிகையாகாது.
பரந்தளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிக்கு நடுவர்களாக தேச மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி அரபு நாடுகளில் இத்துறையில் கடமையாற்றிவரும் நிபுனர்களுடன் ஆறு நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல் ஹாபிழ் யூ.எல். மீராசாஹிப் தலைமையில் மூவரும், அல் ஹாபிழ் எம்.ஏ. காலிதீன் தலைமையில் மேலும் மூவர் கொண்ட இரு நடுவர் குழாத்தினர் இப்போட்டியினை நடாத்தியிருக்கின்றனர்.

manar2

தேச மற்றும் சர்வதேச விதிமுறைகளை முடியுமானளவு அமுல்படுத்தி இப்போட்டி நடாத்தப்படவேண்டும் என்ற சிந்தணையின் நிமித்தம் போட்டியாளர்கள் போட்டி விதிமுறைகள் பற்றி போட்டி இடம்பெறுவதற்கு முன்னரே ஏற்பாட்டாளர்களினால் விலாவாரியாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

manar3

பிரிவுகளுக்கு ஏற்ப போட்டியாளர்களுக்கான கேள்விகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. முதல் பிரிவுக்கு 4 கேள்விகளும், 2ஆம் பிரிவுக்கு 5 கேள்விகளும், 7 கேள்விகள் 3ஆம் பிரிவுக்குமாக வயைறுக்கட்டிருந்ததுடன் போட்டியாளர் முதல் கேள்வியாக அவர் விரும்பிய சூறாக்களை தெரிவு செய்து ஓத வேண்டும். ஏனைய கேள்விகளை போட்டியாளரே அவருக்குரிய கேள்விகளை குழுக்கள் மூலம் தெரிவு செய்து நடுவரிடம் ஒப்படைப்பர். பின்னர் நடுவர்களால் அக்கேள்விக்குரிய முதல் சிறு பகுதி ஓதிக்காட்டப்பட்டதும் தொடர்ச்சியாக போட்டியாளர்கள் ஓத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

இம்மூன்று நாள் போட்டிகளை கண்கானிக்கவென ஊர்த்தலைவர்கள் பலர் விஜயம் செய்திருந்தனர். விருந்தினர்கள் வேறுபட்ட நாட்களில் கட்டம் கட்டமாக இப்போட்டிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர். கிpழக்கு மாகாணசபை உறுப்பினர் ஸிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவரும் காதி நீதிபதியுமான எஸ்.எம். அலியார் பலாஹி, ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஸ்ஸெய்க் ஏ.ஜி.எம். அமீன், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், தஃவா அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

manar4

இதேவேளை இப்போட்டிக்களில் முதல் பிரிவு ஆண்களில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை முறையே காத்தான்குடியைச்சேர்ந்த காலிதீன் காலித் அஹமட் மற்றும் முஹம்மது உசனார் முஹம்மது ஸிபாக் ஆகியோர்களும் 3ஆம் இடத்தினை ஏறாவூரைச் சேர்ந்த ஜின்னா முஹம்மது பிர்னாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

முதலாம் பிரிவு பெண்களில் முதலாம் இடத்தினை ஏறாவூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்து சகோதரிகள் இருவர் பெற்றுக்கொண்டனர். சஹாப்தீன் முப்லிஹா மற்றும் சஹாப்தீன் றஸானா ஆகியோரவர்களாவர். இரண்டாம் இடத்தினை காத்தான்குடியைச் சேர்ந்த இருவர்களே பெற்றுக் கொண்டனர்;. சஹீட் பாத்திமா சனா மற்றும் முஹம்மது யூசுப் பாத்திமா றிழ்மியா ஆகியோர்களாவர்.
இரண்டாம் பிரிவில் (20 ஜூஸ்உக்கள்) முதலாம், இரண்டாம் இடங்களிற்கு முறையே வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஜே.எம்.அஸ்லம் மற்றும் எம்.எம்.எம்.ஸிபான் ஆகியோர்களும் 3ஆம் இடத்திற்கு காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எம்.ஏ. றின்ஸான் தெரிவுசெய்யபட்டனர்.

முப்பது ஜூஸ்உக்களான மூன்றாம் பிரிவில் எம்.ஐ.எம்.இஸ்ஸத் (வாழைச்சேனை) முதலாம் இடத்தினையும், காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.ஜி.எம்.நப்ரீஸ் மற்றும் எம்.ஏ.எம்.அர்ஸத் ஆகியோர் முறையே 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் வைபவம் கடந்த 27.09.2014 சனிக்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபிய நாட்டின் முக்கியஸ்தர் அஸ்ஸெய்க் அபு அப்துல் அஸீஸ் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஸித் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஸ்ஸெய்க் ஏ.எல.எம்.மும்தாஸ் மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு எதிர்காலத்தில் இன்ஸா அல்லாஹ் தேசிய மட்டத்தில் நடாத்தப்படுவதற்கான பூர்வாங்க வேலைகள் நாம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

வெற்றிபெற்ற 12 வெற்றியாளர்களுக்கும் பணப்பரிசில்கள், நினைவுப்பரிசில்கள் அடங்கலாக சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முதல் பிரிவில் முதல் இடத்தினைப் பெற்ற ஆண்களில் ஒருவருக்கும், பெண்கள் இருவருக்குமாக பத்தாயிரம் ரூபா வீதம் மூவருக்கும், 2ஆம்; இடங்களை பெற்ற இருவர்களுக்கு ஏழாயிரம் ரூபா வீதமும் வழங்கி வைக்கப்பட்டன.

இரண்டாம் பிரிவில் முதலிடத்திற்கு 15 ஆயிரம ரூபாவும், 2ஆம், 3ஆம் இடங்களை பெற்றவர்களுக்கு முறையே 10 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன.

மூன்றாம் பிரிவில் முதலிடம் பெற்றவருக்கு 20 ஆயிரம் ரூபாவும், 2ஆம் 3ஆம் இடங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முறையே 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Published by

Leave a comment