வரட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விதை நெல் நிவாரணம் வழங்க நடவடிக்கை

???????????????????????????????– ஹாசிப் யாஸீன்

அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நிவாரணமாக விதை நெல் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

காரைதீவூ பிரதேச செயலகத்துக்குட்பட்ட விவசாயப் பிரதிநிதிகளை அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் கலாநிதி சரத் வீரசேகரவின் இணைப்பாளர் ஏ.எம். ஜாஹிரின் அழைப்பின் பேரில் வருகைதந்த விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தில் விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.

???????????????????????????????

இதன்போது விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளால் விவசாயிகளின் குறைபாடுகள் பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது.

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போக நெற் செய்கைக்காக விதை நெல் நிவாரணமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தபோது ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.

???????????????????????????????

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டவுள்யூ.டீ.வீரசிங்க உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளும், விவசாய மற்றும் கமநலத் திணக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சா் உள்ளிட்ட குழுவினா் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைத்தனர்.

Published by

Leave a comment