‘மாப்பிள்ளைகளது அபிலாசைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்’- வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களின் கல்வி போராட்டத்தின் பின்னனி
மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு காரணம் மாணவர்களை பிழையான அரசியல் வன்முறை சார் கலாச்சாரத்துக்குள் தூண்டுவதே
– எம்.ரீ.எம்.பாரிஸ் (செயலாளர், மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்)
வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியினை அண்மைக்காலமாக சற்று ஆராய்வோமானால் வெற்றியின் பாதைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஆரம்பிக்கப்படல்
மட்டு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும் முன்னாள் அனர்ந்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் அயராத முயற்சிகள் கல்வி வலயம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது என்ற வரலாற்று உண்மையை இச்சந்தர்பத்தில் பதிவிடலாம் என்று நினைக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு என தனி கல்வி வலயம் இல்லாத காரணத்தால் தமிழ் முஸ்லிம் விகிதாசார அடிப்படையில் முஸ்லிம் மாணவர்களும் ஆசிரியர்களும் பல சந்தர்பங்களில் புறக்கனிக்கப்பட்டு வந்தனர்.
விளையாட்டு நிகழ்வுகளிலும் கோட்ட மட்ட வலய மட்ட போட்டிகளிலும் கூட மாணவர்களின் ஆற்றல்களை வெளிச்கொணர முடியாத நிலை அன்று காணப்பட்டது.
2013.07.01 திங்கட்கிழமை மீராவோடை அல்-ஹிதாயா உயர்தர மாணவர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு எதிராக மனித உரிமை ஆனைக்குழுவிற்கு செல்லல் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு
முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் கல்விக்கான முன்னெடுப்பு இன்று அந்நிலையை உடைத்து எறிந்தார் ஒரு முஸ்லிமும் இன்றுவரை இனவாதம் பேசியது கிடையாது எமது உரிமையை சத்தமிட்டு பல சந்தர்பங்களில் பேசி இருக்கின்றோம் கல்வி வலயம் ஒன்று முஸ்லிம்களுக் தேவை என்று உணரப்பட்ட காலத்தில் இன வாதத்தினை தூண்டும் சில அரசியல் வாதிகள் இதற்கு குறுக்கிட்டனர்.பல சந்தர்பங்களில் புலிகளினால் முன்னால் அமைச்சர் அமீர் அலி அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார் என்ற செய்தியை இவ்விடத்தில் ஒரு வரலாற்று உன்மையாக பதிவிட விரும்புகின்றேன்.
இவ்வாறு எமது மாணவர்களின் கல்விக்காக பல முயற்சிகளில் பல்வேறு பட்ட கஸ்டங்களையும் துன்பங்களையும் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளும் புத்தி ஜீவிகளும் எதிர் கொண்டு இருக்கின்றனர். இது எமக்கு வெற்றியை தந்திருக்கின்றது. 3தடவை நாம் அகில இலங்கை ரீதியில் க.பொ.சாதாரண தர பரீட்சையில் முதலிடத்தை பெற்றிரக்கின்றோம் அதிலும் விஷேட அம்சம் என்னவென்றால் ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலகம் முதலிடத்தை பெற்றிருக்கின்றது.
2013.09.06 ஓட்டமாவடி தேசிய பாடசாலை மானவன் ஒருவருக்கு ஆசிரியர் கண்டித்தமைக்காக ஆசிரியர் தாக்கப்படல் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தல்
இவ்வாறு கல்குடா முஸ்லிம்ள் கல்வியில் மறுமலர்ச்சி கண்டு கொள்ளும் கால கட்டத்தில் பிழையான வன்முறை கலாசாரத்துக்குள் மாணவர்களை தூண்டி சுகம் கானும் சில நாஷகார சக்திகள் எமக்குள் இருத்து கொண்டு எமது மாணவர்களின் கல்வியை பாழ் படுத்தி கொண்டிருக்கின்றனர்.
கல்குடா முஸ்லிம் பாடசாலைகள் ஒரு கண்னோட்டம்
2013.07.01 திங்கட்கிழமை மீராவோடை அல்-ஹிதாயா உயர்தர மாணவர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு எதிராக மனித உரிமை ஆனைக்குழுவிற்கு செல்லல் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு.
2013.09.06 ஓட்டமாவடி தேசிய பாடசாலை மானவன் ஒருவருக்கு ஆசிரியர் கண்டித்தமைக்காக ஆசிரியர் தாக்கப்படல் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தல்.
2013 வருடம் காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில ஆசிரியர் தட்டுபாடு நிவர்த்தி கோரி பொதுமக்கள் மாணவர்கள் ஆட்பாட்டம்.
2013 செம்மண்னோடை அல்-ஹம்ரா வித்தியாலய ஆசிரியர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவர்கள் வீதிக்கு வரல்.
2014.09.29 திங்கட்கிழமை வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலையினை மூடி ஆட்பாட்டத்தில் ஈடுபடல்.
இவ்வாறு பல பிரச்சினைகளுக்காக கல்குடா பிரதேசத்தின் பாடசாலைகளில்; கண்டன பேரனி ஆர்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஒரு சிலவை மாணவர்களின் நலனுக்கான போராட்டமாக இருத்தாலும் ஒரு சில சமூகத்துக்குள் பிரச்சினைகளை உருவாக்கி அதில் குளிர் காயும் நயவஞ்சகம் படைத்த உள்ளங்களினால் மாணவர்களை தூண்டி அதன் பின்னனில் ஏற்படுத்தப்பட்டவையாக காணப்படுகின்றது.
2013.09.06 ஓட்டமாவடி தேசிய பாடசாலை மானவன் ஒருவருக்கு ஆசிரியர் கண்டித்தமைக்காக ஆசிரியர் தாக்கப்படல் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தல்
இவ்வாறான விடயத்தில் சமூக நலன் விரும்பிகளும் இளைஞர்களும் சக தலைவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் விழிப்புடன் செயற்பட வேன்டும் நேற்று 29.2014) அந்நூர் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற ஆட்பாட்டம் ஒரு பின்னனியில் ஏற்படத்தப்பட்டதாக என்ன தோன்றுகின்றது.
ஏன் எனில் அதிபர்,ஆசிரியர்களுக்கு கட்டு பட்டு கல்வி கற்று தரும் ஆசானை மதித்து நடக்க வேண்டிய மாணவ சமூகம் இவ்வாறு வீதியில் இறங்க வேண்டிய நிலை என்ன? துண்டு பிரசுரம் அடித்து வினியோகித்து ஆட்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான தேவை ஏன் இந்த மாணவர்களுக்கு தோன்றியது.
முறையாக இப்பிரச்சினைகளை இம் மாணவர்கள் கையான்டு இருக்கலாமே அதிபர்,ஆசிரியர்களுடன் முறையாக பேசி தீர்மானித்து இருக்கலாம் எந்த ஒரு ஆசிரியனும் ஒரு மாணவனை அழிவின் பாதைக்கு கொண்டு செல்ல வேன்டும் என்று நினைப்பார்களா? நிச்சயமாக இல்லை இவ்வாறான சச்சரவுகளின் பொது கட்டாயம் மாணவ சமூகம் சிந்தித்து செயற்படவேன்டும் அரசியல் மற்றும் இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தனிப்பட்டவர்களினதும் விரோதங்களையும் வைத்து வைத்து கொண்டு இவ்வாறான வன்முறைகளையும் பிரச்சினைகளையும் தூண்டிட சில மோஷமான சிந்தனை படைந்த உள்ளத்தை கொண்ட சக்திகள் விரும்புகின்றனர். இதில் இருத்து எமது மாணவ சமூகத்தை பாதுகாப்பது எம்மனைவரினது கடமையும் பொறுப்புமாகும்.
அது மாத்திரம்மல்லாது மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் கரிசரனை கொண்டு மாணவர்கள் பிழைவிடும் போது கண்டிக்கின்ற சந்தர்ப்பத்தில் மாணவர்கள் போலீசுக்கும் மனித உரிமை போன்ற ஆணைக்குழுவிற்கும் நீதி கேட்டு செல்லும் நிலையினை காண முடிகின்றது.
தொட்டாலும் குற்றம் பட்டாலும் குற்றம் என்ற நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆசிரியர் சமூகம் மாணவர்கள் மீது அக்கரை கொண்டு செயற்படாமல் தனது தொழிலை பாதுகாத்து கொண்டால் மட்டும் போதும் என்று நினைத்து செயற்படுகின்றனர்.
இவ்வாறு ஆசிரியர் சமூகம் செயற்படுவார்களானால் எமது மாணவர்களின் நிலை என்ன என்று பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் ஆசிரியர் சமூகத்தை கண்னியமாக நடாத்துவது எமது கடமையல்லவா?
அது போல மாணவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்குறிய சிறந்த கல்வியை வழங்குவதுடன் ஆண் மாணவர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றி கொடுப்பதுடன் அவர்கள் விடயத்தில் கரிசரணையுடன் செயற்படுவது சமூக பொறுப்புள்ள எம்மவரின் கடமையாகும் ஏன் எனில் பெண் பிள்ளைகளை கண்னும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்து படிக்க வைத்து விட்டு திருமணம் முடிப்பதற்கு மாப்பிள்ளையாக அன்று நீங்கள் கவனிக்காமல் பெண் மாணவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு ஆண் மாணவர்களை வீதியில் இறங்கி போராட்டத்தில் களம் இறக்கி அவர்களுடைய கல்வியை சீர் கெடுத்த நாம் நாளை எமது பெண் பிள்ளைகளின் வாழ்கையை நினைத்து வருத்தும் நிலை எமக்கு ஏற்படும் இது விடயத்தில் சமூக பொறுப்பு வாய்ந்த அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோமாக!
Leave a comment