ஏற்கனவே திட்டமிட்டபடி
உள்ளூர் சந்தையில் இருந்து
நாற்ற மீன்,
அழுகத் தேங்காய்,
அவிஞ்ச தக்காளி,
கூழ் முட்டை
பலாக்கொட்டை என்று
வரவழைக்கப்பட்ட பலராலும்
ஆசனங்கள் நிரம்பி வழிந்தன
வட்டா வைத்து
அழைத்து வந்த
வெளியூர் நசல்க்கோழியை
உள்ளூர் உளுந்துவடைகள்
கும்பிடு போட
கூட்டமும் ஆரம்பமாகின
ஒவ்வொரு வடையாய்
உரையாற்ற ஆரம்பித்து
உளுந்துவடை முடிக்கும்போது
நாளை முதல்
பருப்பு வடை விற்பனைக்கு
தடை உத்தரவு வேண்டும் என்றும்
உளுந்து வடையின் பெயர்
ஓட்டை வடை என்றே
அழைக்கப்பட வேண்டும் என்றும்
ஓட்டை வடை மட்டுமே
இந்த நாட்டின்
தேசிய வடை என்றும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இறுதியாய்
ஓட்டை வடை விற்பனைக்கு
தன் செத்தகோழிகள்
உதவி செய்யும் என்று
நசல்க்கோழி வழங்கிய உறுதிமொழியுடன்
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது !

Leave a comment