காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலய மாணவன் மாவட்டத்தில் முதலிடம்!
காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான எம்.எச்.எம். அன்வரின் புதல்வரான அர்ஷக் அகமட், 2014- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.
அர்ஷக் அகமட் காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவன் அர்ஷக் அகமட் அவர்களுக்கும், அவரோடு சேர்ந்து சித்திபெற்ற எமது ஊர் ஏனைய மாணவச் செல்வங்களுக்கும் “யுவர் காத்தான்குடி” இணையத்தளம் மற்றும் அதன் அன்பான வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Leave a reply to Ruwaiz Cancel reply