“அப்பாவி முஸ்லிம் பெற்றோர்கள் எங்களிடம் வந்து முறையிடுகின்றனர்” – பொதுபலசேனாவின் தலைவரின் ஆங்கில உரையை காணத்தவறாதீர்கள்!

vimala– AK-48

கொழும்பு: நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் அனைத்து பேச்சாளர்களும் துவேசித்தை உமிழ்ந்தனர். பொதுபலசேனாவின் தலைவர் விமலஜோதி தேரர் பொதுபலசேனா என்றால் யார், அதன் நோக்கம் என்ன? இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பனபற்றி உரையாற்றும்

இக்காட்சியை எமது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் பொதுபலசேனாவின் மாநாட்டின் காணொளியில் 30வது நிமிடத்திலிருந்து 40வது நிமிடம்வரைக்கும் சிங்களம் தெரியாத, ஆங்கிலம் தெரிந்த எமது வாசகர்கள் காணலாம்.

வெளிநாட்டு மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு இலங்கை முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என தோலுரித்துக்காட்டும் ஓர் சதித்திட்டத்திலேயே இவ்வுரை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கான பாரிய ஆபத்துக்கள் இருப்பதை வெட்டும் துண்டுமாக தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டும் இவர்களின் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கிள்ளியெறியப்படவேண்டும்.

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழவோ அல்லது கவிதைகள் பாடி புகழ்போற்றும் தனிநபர்களுக்கான நேரமல்ல இத்தருணம்.

கடந்த ஊவா தேர்தல் உங்கள்மீது முஸ்லிம்களின் வெறுப்புக்களை படம்பிடித்துக் காட்டிருக்கும் நிலையில், தயவு செய்து ஆளும்கட்சியில் அங்கத்துவம்பெற்றிருக்கும் எமது முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் சோரம் போகாமல் முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு உத்தரவாதமுள்ள அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

Published by

Leave a comment