காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் கீழ் செயற்படும் அன்வர் பாலர் பாடசாலையின் 2014ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா 28-09-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அன்வர் பள்ளிவாயல் மற்றும் அன்வர் மத்ரசா ஆகியவற்றின் தலைவருமான எம்.எல்.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகள் பரிசும் ,விருதும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியைகளும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் சோடாக் குடித்தல்,பலூன் ஊதி உடைத்தல்,பின்னல் நடை,உடற் பயிற்சி,அபினய குழுப்பாடல்,ஓட்டமும் வேகமும்,கயிறு இழுத்தல் ,கட்டம் அடுக்குதல் போன்ற பல்வேறு பாலர் விளையாட்டுக்கள் இடம்பெற்றது.
இவ் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,நகர சபை உறுப்பினர் சியாட், ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள் ,கல்வியலாளர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by





Leave a comment