கொழும்பு: மியன்மார் முஸ்லிம்களின் இரத்தத்தைச் சுவைத்த மியன்மார் முஸ்லிம்களின் கசாப்புக்கடைக்காரன் என அழைக்கப்படும், மியன்மாரின் பிரபல பௌத்த பிக்கு விராது தேரர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பொதுபல சேனா அமைப்பு நாளை நடத்தும் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் நோக்கில் அவரது இலங்கை விஜயம் அமைந்துள்ளது.
இவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏனைய நாடுகளின் இரண்டாம் நிலை அரச தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரும்போது அளிக்கப்படும் வரவேற்பு விராது தேரருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது பல சேனாவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் விராது தேரருக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் மூலம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
மியன்மாரில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் விராது தேரரின் 969 அமைப்பினரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்த சிந்தனைகளின் பேரில் கொடூரமான முறையில் உயிருடன் எரித்தும், அடித்தும் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனாவின் மாநாட்டில் விராது தேரர் கலந்து கொள்வது தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி நாட்டில் இல்லாத ஓர் சந்தர்ப்பத்திலேதான் பொதுபலசேனாவின் கூட்டமொன்று இடம்பெற்று பின்னர் அழுத்கமையை எரித்தது. இவ்வாறான ஓர் மற்றுமொரு சந்தர்ப்பத்தை பொதுபலசேனா மீண்டும் கையாளக்கூடிய தருணங்கள் ஏற்படலாம் என இலங்கை முஸ்லிம்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
Published by


Leave a reply to Abdullah Mihlar Cancel reply