–எம்.எச்.எம். அன்வர்–
காத்தான்குடி:சிறுவர் துஷ்பிரயோகம் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பான விழிப்பூட்டல்கள் மற்றும் செயலமர்வுகள் காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றவருகின்றன இந்தவகையில் நேற்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை இணைந்து பிரதேச செயலகத்தில் மேற்படி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெற்றது
பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ சி ஏ அப்கர் பொலிஸ் உதவி பரிசோதகர் கே செல்வராசா முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபீன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம் ஐ எம் சுபைர் உட்பட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் சிவில் பாதுகாப்பு குழுப் பிரதிநிதிகள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் திவினெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.
இதன்போது 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அதனோடினைந்த சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த இக்குழு தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment