ஏறாவூர்: ஏறாவூர்,பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு அருகாமையிலுள்ள “லூலு” நகைக்கடைக்கு முன் சற்று முன் விபத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் லுகர் தொழுகையை முடித்துக்கொண்டு பிரதான வீதி பாதையோரமாக நடந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த
ஹயாத்து முஹம்மது என்ற 75 வயதுடைய முதியவர் மீது மட்டக்களப்பை நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று பின்னால் வந்து மோதியதால் முதியவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதையோரமாக காணப்பட்ட மின் கம்பத்தில் பிக்கப் வாகனம் மோதிய பின்புதான் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளோன்றும் சேதமடைந்து காணப்பட்டது.
படு காயமடைந்த முதியவர் கிராமகோட் வீதியில் கோழிக் கடை நடாத்தும் அமீர் என்பவரின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Published by



Leave a comment