களுவங்கேணியில் ஒரு வாரத்தின் பின்னர் மீண்டுமொரு தூக்கு சம்பவம்

evr– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி-1, மொறக்கொட்டான்சேனை வீதியில் வசித்து வந்த 24 வயதுடைய இருபிள்ளைகளின் தந்தையான சிரிகந்த்தராஜா ரவிச்சந்திரன் என்பவர் 25-09-2014 மதியம் கழுத்தில் நைலான் கைரொன்றினால் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

இவரது மனைவி வெளிநாடு சென்றதன் பின்னர் இவருடன் எதுவித தொடர்பும் இல்லையென்றும், இவரது பிள்ளைகள் இருவரும் மனைவியின் தாயிடத்திலேயே பராமரிக்கப்டுவதாகவும், இப்பிள்ளைகளை இவர் சென்று பார்ப்பதில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தினமும் மது போதையில் உலாவும் இவர், நேற்று மதியம் அவரது தந்தை கூலி வேலை செய்யும் தென்னந்தோட்ட காணியில் உள்ள வீட்டினுள் கழுத்தில் சுருக்கிட்டு வீட்டு வளையில் தொங்கி மரணமடைந்து காணப்பட்டதாக இவரது சகோதரி புஸ்பலதா தெரிவித்தார்.

suicide evr

சம்பவம் இடம் பெற்ற இடத்துக்கு ஏறாவூர் பொலிசாருடன் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளின் பின்னர் பிரேதப்பரிசோதனைக்காக சடலத்தை செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு பொலிசாரைக் கேட்டுக் கொண்டார்.

பிரேதப்பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

சென்ற வாரமும் இதே பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.

evr

Published by

Leave a comment