09 வயதுச் சிறுமி சீமாவை சீரழித்த சமூக விரோதி ஐ.எம் ரமழானுக்கு இலங்கை அரசு மரண தண்டனை விதிக்க வேண்டும்

ntj (3)– NTJயின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை

காத்தான்குடி: கடந்த 10.9.2014 (புதன்கிழமை) அன்று மாலை 7 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவு எல்லையிலுள்ள மஞ்சந்தொடுவாய் ஜின்னா வீதியைச் சேர்ந்த பாத்திமா சீமா (வயது 09) எனும் சிறுமி ஐ.எம். ரமாழான் எனும் சமூக விரோதியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே!

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்நிகழ்வை மையப்படுத்தி கடந்த 12.09.2014 (வெள்ளிக்கிழமை) அன்று நாம் ‘பாலியல் துஷ்பிரயோகங்களும் சமூக சீரழிவுகளும்’ எனும் கருப் பொருளில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சமூக விழிப்புணர்வுப் பொதுக் கூட்டமொன்றை நடாத்தியிருந்தோம்.

இந்நிகழ்வில் அல்ஹாபிழ் மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) பிரதம உரையை ஆற்றினார். அவ்வுரையில், இச்சமூக விரோதிக்கு இலங்கை அரசு மரண தண்டனையை விதிக்க வேண்டுமென அவர் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். மாலை 07:45 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் ‘சமூக விரோதியான ஐ.எம் ரமழானுக்கு இலங்கை அரசு தனது குற்றவியல் சட்டத்தின் அதி உச்ச தண்டனையான (மரண தண்டனையை) வழங்க வேண்டுமென ஜனாதிபதியைக் கோரும் கோரிக்கை மனுவில் கையெப்பமிட்டனர்’

மேற்கண்ட விழிப்புணர்வுக் கூட்டத்தில் பெறப்பட்ட கையெப்பங்களை இணைத்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஒரு கோரிக்கைக் கடிதத்தை அனுப்பியுள்ளது. குறித்த கடிதமானது மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராசா அவர்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு 01: கடிதத்தின் ஆங்கில, தமிழ் வடிவங்களும், நிகழ்வுகளின் புகைப்படங்களும் தங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தாங்கள் ஊடகப் பணியில் ஈடுபாடுள்ளவர் என்ற வகையில் இத்தகவலையும், ஆதாரப் புகைப்படங்களையும் தங்களது ஊடகத்தில் பிரசுரிக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் அன்பாய் வேண்டுகிறது.

குறிப்பு 02: இக்கடிதத்தின் பிரதிகள் இலங்கை பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன் அவர்களுக்கும், பிரதம நீதியரசர் மோகன் பெரிஸ் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

செயலாளர்
……………………….

ntj

ntj (2)

zahran

ntj (4)

ntj (3)

ntj zahran

Published by

Leave a comment