காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 164ஏ, 164பி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் 23-09-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி 164ஏ பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.யூ.ஏ.புவாட் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.சந்திரசேகர ,காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் , காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பொறுப்பதிகாரி எஸ்.செல்வராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர் உரிமை தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் சி.சக்தி நாயகம் விஷேட உரை நிகழ்த்தினார்.
இங்கு சமகால பிரச்சினைகள் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை மௌலவி எம்.பீ.எம்.பாஹிம் (பலாஹி) நிகழ்த்தினார்.
இதில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் மீதான வன்முறை தொடர்பில் விஷேடமாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி சமுர்த்தி மகா சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஈ,குணரத்தினம்,காத்தான்குடி பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி எஸ். பரமேஸ்வரன்,காத்தான்குடி ஜம்இய்யதுவ் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி மதனி, காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய அதிபர் எம்.கையூம்,காத்தான்குடி 164பி பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் ஜனாபா சில்மியா அன்ஸார், 164ஏ,164பி கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.பி.நபீல் ,காத்தான்குடி பிரதேச திவி நெகும உத்தியோகத்தர்களான ஜனாபா சபீனா உவைஸ்,சி.எம்.அனீஸா உட்பட 164ஏ,164பி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment