டெல்லி: இந்தியாவின் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கரண் சிங் எனும் 5 வயதுச் சிறுவனின் உயரம் தற்பொழுது உலகைத் தொட்டிருக்கின்றது. ஆம். 5 அடி, 7 அங்குலம் உயரமுடைய கரண் சிங் எனும் சிறுவன் கடந்த 2008ம் ஆண்டு பிறந்தான்.
பிறக்கும்போதே உலகில் அதிகூடிய எடையுடைய குழந்தையாக கிண்ணஸ் சாதனையில் பதியப்பட்டான்.
35 வயதுடைய கரணின் தந்தை சஞ்சே கூறுகையில்,
“எனது மகன் பிறக்கும் போதே 7 கிலோ நிறையுடைய உலக சாதனைக் குழந்தையாகவே பிறந்தான். உலகில் கூடிய நிறையையுடைய குழந்தையாகவும், உயரமான குழந்தையாகவும் கிண்ணஸ் சாதனையில் பதியப்பட்டான்”.
சிறுவனின் அப்பா சஞ்சே 6 அடி, 7 அங்குலம் உயரமுடையவர். 26 வயதுடைய சிறுவனின் அம்மா ஸ்வேட்லானா சிங், 7 அடியும் 3 அங்குல உயரத்தையும் உடையவர். தெற்காசியாவில் அதி உயரமான பெண்ணாக ஸ்வேட்லானா திகழ்கிறார்.
“தங்களது பிள்ளை மிக ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவனது வளர்ச்சியில் எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் வைத்தியர்கள் கூறி இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என கரணின் பெற்றோர் கூறுகின்றனர்.
“ஆனால் சிறுவனுக்குரிய துணிகள் வாங்குவதற்குத்தான் நாங்கள் சிரமப்படுகிறோம். 5 வயதுச் சிறுவனுக்குரிய துணிகள் எவையும் எங்களது பிள்ளைக்குப் போதாமல் இருக்கின்றன. அதனால் பெரியவர்களுக்குரிய ஆடைகளையே வாங்கிக் கொடுக்கிறோம்” எனவும் பெற்றோர் கூறுகின்றனர்.
இச்சிறுவனின் உயரம் கிண்ணஸ் உலக சாதனைக்கு உட்படுமா என்று தற்பொழுது ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.
Published by




Leave a comment