கொழும்பு: நாட்டில் இயங்கிவரும் அரசாங்க முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாகாணசபைகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருதாகவும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவிக்கும் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனவும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் மொத்தம் 16,578 முன்பள்ளிகள் இயங்கி வருவதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், இது தொடர்பான பதிவுகள் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சில் பேணப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஐ.தே.க எம்பி அனோமா கமகே வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதற்கு பதிலளித்த போது ஐ.தே.க எம்பி சஜித் பிரேமதாச குறுக்கிட்டு மஹிந்த சிந்தனைக் கொள்கைத்திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தபோதும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளமொன்றை பெற்றுக்கொடுத்ததில்லை எனத் தெரிவித்தார்.
இதனை முற்றாக நிராகரித்த பிரதிய மைச்சர் ஹிஸ்புல்லா, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அரசாங்கமானது மாகாண சபைகள் மூலம் சம்பளம் வழங்கி வரு கிறது. அது மட்டுமன்றி முன்பள்ளி மாணவர்களுக்கு ஒரு கோப்பை பால் வழங்குதல் என்ற செயற்றிட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைய தேசிய, மாகாண, மாவட்ட பிரதேச மற்றும் கிராமிய மட்டத்தில் அபிவிருத்திக் குழுக்களை நியமித்து முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய கற்கை உபகரணங்க ளைப் பெற்றுக்கொடுத்தல், முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு இடங்களை நிர்மாணித்தல், சுத்தமான குடிநீர் தேவைக்களுகென நீர்வடிகட் டிகளைப் பெற்றுக்கொடுத்தல் என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன் னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Published by
![hizbullah[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/hizbullah1.jpg?w=150&h=150)
Leave a comment