‘தயவுசெய்து எனது கனவரை விடுவியுங்கள்’ இஸிஸ் அமைப்பிடம் இங்கிலாந்து பெண்ணின் உருக்கமான வேண்டுகோள்

alan– MJ

லண்டன்: இங்கிலாந்தில் ஓர் டெக்ஸி சாரதியாகப் பணியாற்றும் அலன் ஹெனிங் எனும் நபரை கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் வைத்து இஸிஸ் அமைப்பினர் கைது செய்தனர். இன்றுவரை இவரை இஸிஸ் பணயக்கைதியாக வைத்திருக்கின்றது.

தனது கனவரை விடுவிக்கக்கோரி கடத்தப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் பின்வருமாறு.

அன்பான் இஸிஸ் அமைப்பினரே

நான் பார்பரா ஹெனிங். அலன் ஹெனிங் இன் மனைவி. இஸ்லாமிய தேசம் எனும் உங்களின் கட்டுப்பாட்டில் எனது கனவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார். அவர் இங்கு (இங்கிலாந்தில்) ஓர் டக்ஸி சாரதியாகத் தொழில்புர்ந்து வந்தவர்.

எப்போதும் எங்களுள் இருக்கும் ஓர் மனிதாபிமான உணர்வைப் போலவே எனது கனவரும் சிரியாவில் முஸ்லிம் மக்கள் யுத்தத்தால் அவதைப்படுவதையும், அங்குள்ள குழந்தைகள் அனாதையாவதையும் தாங்க முடியாமல் உதவி செய்யவேண்டும் என்ற நன்நோக்கத்தில் எங்கள் குடும்பத்தையும், தனது தொழிலையும் பிரிந்து சிரியாவுக்கு சென்றார்.

எனது கனவர் அமைதியான சுபாவம் கொண்டவர். சுயலநமற்றவர். சிரியாவில் யுத்தத்தால் அவதிப்பட்ட முஸ்லிம்களுக்காக அங்கு ஓர் அம்பியுலன்ஸை வாடகைக்கு அமர்த்தி, அவற்றுள் குடிநீரும், உணவுப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு மக்களுக்கு உதவுவதற்காக சென்றுகொண்டிருக்கும்போது இஸ்லாமிய தேசப் படையால் கடத்தப்பட்டார்.

alan
கடத்தப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்: அலன் சிரியா குழந்தையுடன் தனது மனிதாபிமானப் பணியில்….

அவரது தாமத்தை நினைக்கையில் எனக்குள் நான் பிராத்தித்துக்கொள்கிறேன். எனது கனவரின் விடுதலைக்காக உங்களை மனிதாபிமானத்துடன் மிக உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இஸிஸ் அமைப்பால் கடத்தப்பட்டுள்ள அலன் ஹெனிங் இன் மனைவி பார்பரா ஹெனிங் இஸிஸ் அமைப்புக்கு செய்தி அனுப்பியிருக்கின்றார். ஆனால் இதுவரைக்கும் குறித்த தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதுவிடயமாக பிரித்தானிய முஸ்லிம்கள் தங்களது ஆழ்ந்த கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். பிரித்தானிய அரசும் மக்களும் அலனின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

‘செய்தியாளர்களையும், தொண்டார்வ ஊழியர்களையும் கடத்தி, கொல்வது ஓர் வீரப்போராகாது’ எனவும், ‘இஸ்லாத்தை பிறமக்கள் இழிவுபடுத்த இது ஓர் அரிய சந்தர்ப்பம்’ எனவும் பிரித்தானிய பள்ளிவாயல்கள் இமாம்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Published by

Leave a comment