பதுளை: ஊவா ஆட்சியை ஐ.தே.க கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் கூட்டமைப்பை ஓரம் கட்டி போனஸ் ஆசனத்தை பெறலாம் என்ற நப்பாசை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ளது என்பதை – அந்த அமைப்பு கபேயிடம் விடுத்துள்ள முறைப்பாட்டின் மூலம் உணரக்கூடியதாக உள்ளது என அகில மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்ப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு
காத்ததான்குடி , வடக்கு என்று முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து வரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என அழைக்கப்படும் கழகம் இன்று சொற்பளவில் வாழும் பதுளை முஸ்லிம்களையும் பிரித்தாள முற்படுவது கண்டனத்திற்குரியது மட்டுமன்றி இறைசாபத்திற்கும் உரியது.
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் வெலிமடை ,குருத்தலாவ, பொறகஸ் போன்ற பகுதிகளில் வாழும் மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கிவருவதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனும் அமைப்பு குறிப்பிட்டுள்ளமை வன்மையாக கண்டித்தக்கது மட்டுமன்றி மிகக் கேவலமான கருத்தும் ஆகும்.
இவ்வாறான செயற்பாடுகளில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஈடுபடுகின்றார்கள் என்பதை நிருபிக்க முடியுமா என அந்த அமைப்பிடம் சவாலாக விடுக்க விரும்புகின்றோம்.
நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்களான இவர்கள் புனிதமான மார்க்கத்தை போதிக்கும் கல்லூரியில் கல்வி பயின்று விட்டு இவ்வாறான கேவலமான கருத்துக்களை கூறுவதன் மூலம் தங்களை மட்டுமன்றி முஸ்லிம் சமுகம் கௌரவமாக மதிக்கும் இவர்கள் கல்வி பயின்ற கல்லூரியையும் மிகத்தாழ்வாக நினைக்கும் மனோ நிலைக்கு சமுகத்தை இட்டுச் செல்கின்றது என்பதை மிக வேதனையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
வடக்கு முஸ்லிம்களுக்காக மட்டுமன்றி நாடு பூராகவும் உள்ள தனது சமுகத்திற்காக அயராது உழைத்து வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை இலக்காகக் கொண்டு அவருக்கு எதிராக் கருத் துக்களை கூறிவரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செயற்பட்டு வருவதை நோக்கும் போது இவர்களின் பின்புலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கோடீஸ்வரர்கள் பின்னணியில் இருப்பதாகவே எண்ணத் தோண்றுகின்றது என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Published by
![RISHATH[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/rishath1.jpg?w=133&h=150)

Leave a comment