காத்தான்குடி: புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திணைக்களத்தின் ஏற்பாட்டில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி நகர சபையும்,காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து 19-09-2014 வெள்ளிக்கிழமை
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடிகான்களை நீதிமன்றத்தினால் சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளை பெற்ற தவராளர்கள் மற்றும் காத்தான்குடி நகர சபை சுகாதார தொழிலாளிகள் ஆகியோரினால் துப்பரவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் சிறு குற்றம் இழைக்கப்பட்டு இரண்டு வருடத்துக்குட்பட்டு தண்டனை பெற்றவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களை சீர்திருத்த அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் மட்டக்களப்பு மாவட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்திற்கு வழங்கிய ஆலோசனையின் பேரில் இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டு-மாவட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் சீர்திருத்த உத்தியோத்தர் எஸ்.தயானந்தன் தெரிவித்தார்.
இதன் போது மட்டு- நீதவான் நீதிமன்றத்தினால் சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளை பெற்ற தவராளர்கள் மற்றும் காத்தான்குடி நகர சபை சுகாதார தொழிலாளிகள் ஆகியோரினால் காத்தான்குடி பிரதான வீதியில் குர் ஆன் சதுக்கத்துக்கு முன்னாலுள்ள காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.
இவ் டெங்கு ஒழிப்பு ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன் , மட்டு-மாவட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் சீர்திருத்த உத்தியோத்தர் எஸ்.தயானந்தன், சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரதேச இணைப்பாளர் எம்.எம்.றசூல்சா உட்பட மட்டு- நீதவான் நீதிமன்றத்தினால் சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளை பெற்ற தவராளர்கள், காத்தான்குடி நகர சபை சுகாதார தொழிலாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment