அமைச்சர் றிஷாதின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கபே நிறுவனத்திடம் முறைப்பாடு

NFGG Scanned Copy– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

பதுளை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊவா மாகாணசபைத் தேர்தல் நாளை இடம்பெற இருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து கபே நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.

அத்தோடு குறித்த பிரதேசத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தேர்தல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகள் ஆதாரங்கள், மற்றும் சாட்சியங்களையும் உரிய அமைப்பில் தொடர்புடையவர்களுக்கு வழங்கும் செயன்முறை குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

ஊவா மாகாணசபைத் தேர்தல், பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்களை திசைதிருப்பும் நோக்கில் மேற்கொள்ளபப்டும் சட்டவிரோதப் தேர்தல் பிரச்சாரம், மற்றும் கையூட்டல் வழங்கும் நிகழ்வுகள் தொடர்பிலான முறைப்பாடுகள் என்று தலைப்பிடப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

எதிர்வரும் 20- செப்டம்பர் 2014 அன்று ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் 17-செப்டம்பர் 2014 நள்ளிரவு 12 மணியோடு நிறைவுக்கு வந்துள்ளது இந்நிலையிலும் ஜனநாயக ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் கௌரவ அமைச்சர் றிஷாத் பதுர்தீன் அவர்கள் மக்கள் சந்திப்புக்களை பொறகஸ், வெலிமட, குருதலாவ ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வருவதாகவும்.

மக்களின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கும் செயற்பாடுகளில் அவரது ஆதரவாளார்கள் ஈடுபட்டு வருவதாகவும் ஆதாரபூர்வமான அமைப்புகளில் எமக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே குறித்த பிரதேசங்களிற்கு தங்களுடைய சுயாதீனமான குழுவினர் விஜயம் செய்து நிலைமைகளை கண்காணிக்கும்படியும், உண்மையானதும் நேர்மையானதுமான தேர்தல் குறித்த பிரதேசத்தில் நடைபெறுவதை உறுதிசெய்யுமாறும் தங்களை வேண்டிக்கொள்கின்றோம். என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் அவர்கள் குறித்த கடிததில் தெரிவித்திருக்கின்றார்.

NFGG Scanned Copy

Published by

Leave a comment