மூன்று பிள்ளைகளின் தாய் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை: பலாச்சோலையில் சம்பவம்

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை, வந்தாறுமூலையில் இன்று பிற்பகல் மூன்று பிள்ளைகளின் தாயான பத்மநாதன் செல்வராணி (வயது-26) என்பவர் தனது வீட்டு வளையில் துணியொன்றினால் கட்டி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவரது கணவரான பூவலிங்கம் விவேகானந்தன் என்பவர் மேசன் தொழிலுக்காக கொழும்பு சென்று மறுநாளே தொழில் இன்றி திரும்பியதால் கோபமுற்ற இவர் கணவரோடு முரண்பட்டே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக இவரது தாயாரான செல்லையா கண்மணி தெரிவித்தார்.

eravur (2)

தற்கொலை செய்துகொண்டு செல்வராணிக்கு இருபத்துமூன்று நாள் வயதுடைய ஆண் குழந்தையொன்றும் இருப்பது குறிப்படத்தக்கது.
சம்பவம் நடைபெற்ற ‘பேக்காஸ் வீதி’, மூன்றாம் குறுக்கு, பலாச்சோலைக்கு இபிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களுடன் சென்ற ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாளை பிரேதப்பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

eravur

Published by

Leave a comment