தம்புள்ள: தம்புள்ள பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது கைக்குண்டோ, பட்டாசோ இது குறித்து பூரண விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தம்புள்ள பள்ளிவாசலுக்கு பட்டாசு வீசியதாக நான் எந்த பத்திரிகைக்கும் சொல்லவில்லை. அர்த்த ராத்திரியில் வந்த இருவர் அங்கு கைக்குண்டுகளை வைத்துவிட்டு சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. இது குறித்து விசாரணை நடாத்திய பொலிஸார் அது பட்டாசு என அறிவித்துள்ளனர்.
பள்ளிவாசலுக்கு நான்கு பொலிஸார்கள் காவல் இருந்தும் இந்த அசம்பாவித சம்பவம் நடந்திருப்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியான சம்பவங்களை கேள்வி யுற்றால் பொலிஸ் தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி கட்டளை பிறப்பித் துள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் நான் ஈடுபட்டுள்ள போது இச் சம்பவம் எனக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக இது குறித்து தக்க நடவ டிக்கை எடுக்கும் படி அரச தலை மைத்துவத்திற்கும் பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பு செயலகத்தின் கவனத்திற்கும் கேட்டிருந்தேன்.
இந்த தம்புள்ள பள்ளிவாசல் மீது விஷமிகள் செய்யும் அடாவடித்தனக் காரர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். பள்ளிவாசல் விடயத்தில் எந்தவித மாற்று கருத்துக்களுக்கு இடமில்லை என நான் ஆணித்தரமாக பள்ளிவாசல் நிர்வாக சபைக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுதியாக தெரிவிக் கின்றேன் என்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.
Published by

Leave a comment